கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு EPS – OPS மக்களுக்கு வாழ்த்து!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (O. Pannerselvam), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (Edappadi Palanisamy) இருவரும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 29, 2021, 01:14 PM IST
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு EPS – OPS மக்களுக்கு வாழ்த்து! title=

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (O. Pannerselvam), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி (Edappadi Palanisamy) இருவரும் ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் (OPS), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உங்களை காத்து உலகாளும் பரந்தாமன் பகவான் மகா விஷ்ணு ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் எடுத்த திருநாளை சந்தோஷத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்கள் இனிய ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்” என கூறியுள்ளனர்.

கிருஷ்ணர் அவதரித்த நன்நாளில் குழந்தைகளை கிருஷ்ண பகவான் போல் அலங்கரித்தும், அவர்களின் சின்ன பாதங்களை மாவில் நனைத்து கால் தடங்களை வீட்டு வாசலில் இருந்து வரிசையாக பதியவைத்து பார்ப்பவரின் கண்களுக்கு அந்த குழந்தை கிருஷ்ணனை கிருஷ்ண ஜெயந்தி அன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் கால் தடம் பதித்து நடந்து வந்தது போல தெரியும் வண்ணம் அலங்காரம் செய்து கோலமிட்டு பலகாரங்கள், பால், தயிர், வெண்ணெய் பழ வகைகளை படைத்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு மகிழ்ச்சியடைவார்கள்.

ALSO READ:மதுரையில் பாலம் கட்டுமானப் பணி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

இல்லங்கள் தோறும் மகிழ்ச்சிப் பெருக்கை கொண்டுவரும் திருநாளான ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அன்பும், அமைதியும், இனிமையும் எங்கும் பெருக வேண்டும் என்ற எங்களுடைய விருப்பத்தை தெரிவித்து அனைவருக்கும், புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் ஆகியோரது வழியில் எங்களது உளங்கனிந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ: Don’t Use Hindi: அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும்- Madras HC

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News