Corona Second Wave: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது

நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 21, 2021, 08:46 AM IST
  • தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவாகியுள்ளது.
  • வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் வருகை தருகின்றன.
  • உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில்கள் ஆகியவை மே 15ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
Corona Second Wave: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது  title=

நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது, குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. 

இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவாகியுள்ளது. 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் ( ASI) உள்ள கோவில்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றை  உடனடியாக மூட மத்திய அரசு அறிவித்துள்ளது. 

ALSO READ | புதுச்சேரியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு: ஆளுநர் தமிழிசை

இதை அடுத்து உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயில், தாராசுரத்தில் உள்ள ஐராவதீஸ்வரர், கங்கை கொண்டசோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோயில்கள் ஆகியவை மே 15ம் தேதி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.

அந்த வகையில், மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும், அரசின் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள்  வருகை தருகின்றன. முட்டையிட்டு இனப்பெருக்க காலம் முடிந்து மே, ஜூன் மாதங்களில் இவை திரும்பிச் செல்லும்.

கொரோனா பரவல் (Corona Virus) எதிரொலியாக  கடந்த மார்ச் மாதத்தில் இருந்து,  ஒரு வருட காலத்திற்கும் மேலாக மூடப்பட்டிருந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கடந்த ஜனவரி 10-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா இரஃண்டவது அலை தொடங்கியதன் காரணமாக, மீண்டும் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ALSO READ | Shocking: 5 மாநிலங்களில் 23% தடுப்பூசிகள் வீணாயின, பட்டியலில் தமிழகம் முதலிடம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News