கரூர் அருகே அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட லிங்கமா நாயக்கன்பட்டி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சி பகுதியில் 8 நாய்கள் ஒரு சிறுவனை துரத்தும் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்து லிங்கம நாயக்கன்பட்டி ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கின்றது என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள்
இந்நிலையில் இன்று எட்டு நாய்களுக்கு மேல் சேர்ந்து, ஒரு சிறுவனை விரட்டும் காட்சி காண்போரை பதைபதைக்க வைக்கிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் உதவியதால் அந்த சிறுவன் உயிர் தப்பினார்.
பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. லிங்கமாநாயக்கன்பட்டி ஊராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்தால் இது போன்ற அசம்பாவிதங்களை தவிர்க்கலாம் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உடனே உதவியதால் சிறு காயம் உடன் உயிர் தப்பினார்.
மேலும் படிக்க | ஓசூர் அருகே ஆனந்த குளியல் போட்ட காட்டு யானைக் கூட்டங்கள்: வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ