மக்கள் நீதி மய்யத்தை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது ஏன்? காங்கிரஸ் வைத்த டிவிஸ்ட்

Makkal Needhi Maiam: மக்கள் நீதி மய்யத்தை நாடாளுமன்ற கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு திமுக இதுவரை அழைக்காத நிலையில், அது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் கமல்ஹாசன் கட்சி போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 18, 2024, 06:31 PM IST
  • மநீம-வை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காத திமுக
  • காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் இடங்களில் போட்டி?
  • காங்கிரஸ் கட்சியிடம் இரண்டு தொகுதிகளை கேட்கும் மநீம
மக்கள் நீதி மய்யத்தை திமுக பேச்சுவார்த்தைக்கு அழைக்காதது ஏன்? காங்கிரஸ் வைத்த டிவிஸ்ட் title=

மத்தியில் யார் ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதை முடிவு செய்யும் நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருப்பதால் தமிழ்நாட்டில் அதிமுக மற்றும் திமுக கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டன. ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடனான முதல்கட்ட கூட்டணிப் பேச்சுவார்த்தையை திமுக நிறைவு செய்திருக்கிறது. காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், சிபிஐ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அக்கட்சிகள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலை பெற்றிருக்கிறது. ஆனால் மக்கள் நீதி மய்யத்தை இதுவரை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கவில்லை. 

மேலும் படிக்க | வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி செய்ய பாஜக அரசு சதியா... தொல்.திருமாவளவன் கேள்வி..!!

அதனால் அக்கட்சி திமுக கூட்டணியில் இருக்கிறதா?, எப்போது மநீம கட்சியை கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு திமுக அழைக்கும் என்ற பேச்சுகள் எழத் தொடங்கியது. அது குறித்து திமுக தரப்பில் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் 2 தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. திமுக சின்னத்தில் போட்டியிட விரும்பாத கமல், காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளாராம். அதனால், திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் நேரடியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தாது. காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் அடிப்படையில், அக்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஏதேனும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது மக்கள் நீதி மய்யம். 

இதற்கிடையே, காங்கிரஸ் கட்சிக்கு திமுக எத்தனை தொகுதிகள் ஒதுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் திமுக கூட்டணியில் போட்டியிட்டது. அதே தொகுதிகளை இப்போதும் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது அக்கட்சி. ஆனால் அதிகபட்சம் 7 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு எப்போதும் ஆதரவளித்து வரும் ஒரே கட்சி திமுக என்பதை மனதில் கொண்டு, தொகுதி பங்கீட்டில் சங்கடங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு சொல்லியுள்ளதாம். இதனால், திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி செய்வதில் இழுபறி நீடிக்கிறது. 

ஏற்கனவே குறைந்த தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்க முன் வந்திருப்பதால் இதில் எப்படி மக்கள் நீதி மய்யத்துக்கு இரண்டு தொகுதிகளை காங்கிரஸ் ஒதுக்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இதனால், திமுக கூட்டணி திரைமறைவு பேச்சுவார்த்தை திரிலிங்கான சஸ்பென்ஸை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுஒருபுறம் இருக்க, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி திமுக உடனான கூட்டணிக்கு வர தயாராக இருக்கிறது. ஆனால், அதில் திமுகவுக்கு உடன்பாடில்லையாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சி இப்போது அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் சேர இருப்பதால் அந்த ஒரு இடத்தை குறிவைத்து காய்களை நகர்த்தினார் கிருஷ்ணசாமி. அவரின் இந்த மூவ்வுக்கு திமுக தரப்பில் இருந்து இப்போது வரை எந்த சிக்னலும் கொடுக்கப்படாமல் இருப்பதால், குழப்பத்தில் இருக்கிறாராம் அவர். 

மேலும் படிக்க | பாஜகவை முழுமையாக ஆதரிக்கிறேன் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News