வரும் மக்களவை தேர்தலையொட்டி உச்சக் கட்ட பரபரப்பில் தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. திமுக+காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் அதிமுக+பாஜக தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இணைந்து வருகிறது. அவர்களுக்கான தொகுதிகள் குறித்து அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
நேற்று திமுக தலைமை மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வந்தது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இரண்டு தொகுதியும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டடு. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் கடந்த சில தினங்களாக பேச்சுவாரத்தையில் ஈடுபட்ட வந்த திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டு உள்ளது. இன்று திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்படுகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.