சென்னை: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழக சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ இனிக்கோ இருதய ராஜ் முன்வைத்தார்.
சிறுபான்மையினரின் நலன்களில் அக்கறை கொண்டு அவர்களுக்கு பாதுகாவலனாக விளங்கிய கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று புதிதாக தேர்ந்த்டுக்கப்பட்ட எம்.எல்.ஏ தனது கன்னிப் பேச்சில் கேட்டுக் கொண்டார்.
I demand Bharat Ratna for former CM M. Karunanidhi and also demand Trichy to be made the second capital of Tamil Nadu: DMK MLA Dr. Inigo Irudayaraj during his first speech in Tamil Nadu Assembly
— ANI (@ANI) June 23, 2021
தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசியபோது, திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
Also Read | கலைஞர் கருணாநிதி பிறந்தநாள்: கொரோனா நிவாரண திட்டங்களை தொடங்கி வைக்கிறார் தமிழக முதல்வர்
“சிறுபான்மையினரின் நலன் காத்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.திருச்சியை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் நடுப்பகுதி, என்பதாலும் அனைத்து வசதிகளும் இருக்கும் முக்கிய நகரமான திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். சென்னையில் மக்கள் தொகை பெருகிவரும் நிலையில் இட நெருக்கடியை கருத்தில் கொண்டு திருச்சியை இரண்டாவது தலைநகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்’ என்று அவர் கேட்டுக் கொண்டார்’.
திருச்சி கிழக்கு மிக பெரிய தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு கேரிக்கை விடுக்கிறேன் என்று கூறிய அவர், தமிழகத்தில் நேர்மையான திறமையான ஆட்சியர்களை தனி சிறப்பு செயலாளராக பொறுப்பு வழங்கி துரித நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எடுத்து வருகிறார். கொரோனா தொற்று கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வை காத்து தமிழகத்தின் தந்தையாக முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார் என்று பாராட்டிப் பேசினார்.
ஆளுநர் உரையில் வார்த்தை அலங்காரம் ஏதும் இல்லாமல் வித்தியாசமான ஒன்றாக இருந்தது. கடந்த அதிமுக ஆட்சி, பத்தாண்டு காலமாக தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்து, தமிழர்களின் வேலை வாய்ப்பை பறித்தது. கலைஞரின் பொன்னான ஆட்சியைத் தொடரும் தற்போதைய முதலமைச்சர், ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்திருக்கிறார். கலைஞர் அவர்கள் காட்டிய பாதையில், இன்றைய அரசு பீடுநடை போட்ட செயல்பட்டு வருகிறது.” என்று எம்.எல்.ஏ இனிக்கோ இருதய ராஜ் சட்டப்பேரவையில் பேசினார்.
Also Read | தமிழகத்தின் நிதி நிலைமை சீரான பின் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR