கட்சிகளுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுக்கும் திமுக! அரசு கொறாடா கோவி.செழியன் பேச்சு!

DMK Meeting On CM Stalin Birthday : நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான கூட்டணி 40க்கு 40 என மகத்தான வெற்றி பெறும் என கணிக்கும் அரசு கொறாடா கோவி.செழியன்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 7, 2024, 08:49 AM IST
  • சென்னையில் முதலமைச்சர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
  • எல்லாருக்கும் எல்லாம் கொடுத்த திமுக ஆட்சி
  • எல்லாருக்கும் எல்லாம்! 40 தொகுதிகளும் திமுக கூட்டணிக்கே!
கட்சிகளுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுக்கும் திமுக! அரசு கொறாடா கோவி.செழியன் பேச்சு! title=

சென்னை திருவொற்றியூரில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எல்லாருக்கும் எல்லாம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் மற்றும் ஏழை எளியவர்களுக்கான நல திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவொற்றியூர் அஜாக்ஸ் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் திமுக மேற்கு பகுதி செயலாளரும் வழக்கறிஞருமான வைமா.அருள்நாதன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட தமிழக சட்டப்பேரவையின் திமுக அரசு கொறடா கோவி.செழியன், நலத்திட்ட உதவிகளை வழங்கி மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், மிசா காலகட்டத்தில் திமுக காரர்கள் அனுபவிக்காத கொடுமையா என்று கேள்வி எழுப்பினார். சிறைக்கு செல்ல அஞ்சாதவர்கள் திமுகவினர், எத்தனை பொய் வழக்குகள்? ஆள் கடத்தல் வழக்குகள் போட்டு கொடுமைப்படுத்தினார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த 10 ஆண்டு காலம் ஜெயலலிதா, ஓ பன்னீர்செல்வம் எடப்பாடி என மத்திய அரசுடன் கைகோர்த்துக் கொண்டு, அதிமுகவினர் பொது மக்களுக்கு பல்வேறு கொடுமைகளை செய்தார்கள். ஆனால் அப்போதும் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருந்தது திமுக, இவ்வளவு கொடுமைகளையும் பெற்றுக் கொண்டு, ஐயா வீரபாண்டி ஆறுமுகத்தை பிணமாக தந்தோம் என்று நெகிழ்ச்சியுடன் பேசிய கோவி.செழியன், ஜெயலலிதா படுத்திய பாடு சொல்லவே கேவலமானது.

மேலும் படிக்க | இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவை.. தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி

ஆனால் திமுக காரன் துவண்டு போகவில்லை. இன்றைக்கும் தளபதி மற்றும் உதயநிதி உத்தரவால் தலைமேல் ஏற்று பணியாற்றும் திமுக தொண்டர்களை பாராட்டிய கோவி.செழியன், எத்தனையோ அடக்குமுறை சித்திரவதை சிறைச்சாலை லத்தி சார்ஜ் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வாழ்பவர்கள் திமுகவினர் என்று தொண்டர்களை பாராட்டி பேசினார்.

மேலும், பச்சையாக சொல்ல வேண்டுமென்றால் பிச்சைக்காரனாக வாழ்ந்தாலும் கூட திமுக கட்சிக்காரனாக எழுந்து நிற்கிற கூடாரம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூடாரம், எனவே தான் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது என்று பேசினார்.

தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றம்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்தோம் ஓட்டுக்காக இப்படி சொல்லலாமா என்றும், பொதுமக்களை ஏமாற்றலாமா என பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார்கள். ஆனால் இன்று ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன் பெறுகிறார்கள், பெண்களுக்கு இதுபோன்ற ஒரு மகத்தான திட்டத்தை செய்ததை கண்ட அண்டை மாநிலங்களிலும், தற்போது பெண்களுக்கு உதவி தொகை அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மேலும் படிக்க | விமான நிலையத்தில் உங்கள் லக்கேஜ் சேதமடைந்தால் என்ன செய்ய வேண்டும்?

ஒரு திட்டம் என்பது மத்தியில் செயல்படுத்தி அதனை மற்ற மாநிலங்கள் பின்பற்றுவது தான் வழக்கமாக உள்ளது. ஆனால் மற்ற மாநிலங்களும் ஒரு கட்சியின் செயலைப் பார்த்து தங்கள் மாநிலமும் இந்தத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என எண்ணுகிற நிலைக்கு கொண்டு வந்தவர், அகில இந்திய கட்சிகளுக்கும் பாடம் கற்றுக் கொடுத்தது மு க ஸ்டாலின் என்று கோவி.செழியன் தலைவருக்கு புகழாரம் சூட்டினார்.

ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ ஓட்டுக்காக, கடவுளுக்கு எதிரி திமுக, இந்துக்களுக்கு எதிரி திமுக, சாமிக்கு எதிரி திமுக என பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்று கண்டித்த அவர், பொதுமக்கள் நம்ப வேண்டும் என்கிற மோடி வித்தை பீஹார் குஜராத்தில் யூபி யில் வேண்டுமானால் நடைபெறும் ஆனால் தமிழகத்தில் எடுப்படாது என்று தெரிவித்தார்.

தமிழ்நாடு திராவிட பூமி பெரியார் கட்டிக் காத்த பூமி, இங்கு கடவுளை கும்பிட்டு விட்டு கலைஞருக்கு ஓட்டு போட்டவர்கள் கோடிக்கணக்கான பேர் என்றும், எனவே நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 40க்கு 40 வெற்றி பெற்று மகத்தான வெற்றியை பெறும் என சூளுரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் மற்றும் திருவெற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே பி சங்கர், மண்டலகுழு தலைவர்கள் தி.மு தனியரசு, ஏ வி ஆறுமுகம், மற்றும் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தையல் இயந்திரம் மற்றும் புடவை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மேலும் படிக்க | 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரில் பிரதமர் நரேந்திர மோடி! வேளாண் பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News