பரபரப்பான அரசியல் சூழலில் திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை நடைப்பெற்றது!
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைப்பெற்றது, இக்கூட்டத்தினில் பொதுச்செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்த செயல்திட்டக்குழு கூட்டத்தில் கீழ்காணும் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- புயல் பாதிப்பு நிவாரணத்திற்கு ரூ.13,520 கோடி வழங்க வேண்டும்
- பெரும்பான்மையை இழந்த அதிமுக அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது
- 2G எனும் போலி வழக்கு காற்றில் கலந்த கற்பனை கணக்கு
- ஆர்.கே.நரில் நடைபெற்ற அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்தது கண்டனத்திற்கு உறியது
- ஆர்.கே.நகர் தேர்தலில் முறையாக பணி ஆற்றாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என 5 தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது!
The present government is a minority government. Union government is being a mute spectator of it. Therefore, in the coming TN assembly session, we will raise questions on this: MK Stalin, DMK Working President on AIADMK government in #TamilNadu pic.twitter.com/Ah0ifNCno9
— ANI (@ANI) December 29, 2017