உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் 'மே - 17' இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை, திமுக தலைவர் MK ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்!
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பல்வேறு வழக்குகளின் கீழ் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த அக்டோபர் 2-ஆம் நாள் திருமுருகன் காந்தியின் மீது பதியப்பட்ட வழக்குகளில் ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
“கழக தலைவர் அவர்கள், அ.தி.மு.க அரசின் அராஜகத்தினால், சிறையில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, உடல்நலம் குன்றி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ‘மே – 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அவர்களை நேரில் சந்தித்து உடல்நலன் குறித்து கேட்டறிந்தார்” pic.twitter.com/kWHRMFGFUl
— DMK - Dravida Munnetra Kazhagam (@arivalayam) October 4, 2018
சென்னை உட்பட தூத்துக்குடி, சீர்காழி என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் திருமுருகன் காந்தி மீது 23 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த வழக்களில் சென்னை எழும்பூர், செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியதை அடுத்து ஜாமினில் வெளியே வந்த அவர் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மொத்தம் 55 நாட்கள் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி அவர்கள் உடல்நல குறைவால் 4 நாட்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்ககது.
இந்நிலையில் இன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் திருமுருகன் காந்தி அவர்களை, திமுக தலைவர் MK ஸ்டாலின் நேரில் சந்தித்து உடல்நலன் குறித்து கேட்டறிந்துள்ளத குறிப்பிடத்தக்கது.