சென்னையில் திமுகவின் தலைமைக்கழக சட்ட தலைமை ஆலோசகர் பி.வில்சன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஜாபர் சாதிக் மற்றும் போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தேவையில்லாமல் திமுக மற்றும் தி.மு.க தலைவர்களைச் சிலர் கூறி வருகிறார்கள். விசாரணை ஆரம்ப நிலையில் இருக்கும்போதே NCB துணை இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது, அதுவும் தேர்தல் நேரத்தில் சொல்வது சந்தேகத்தைத் தருகிறது. இதுபோன்ற பேட்டிகள் அவதூறு (Defame) செய்யும் எண்ணத்தில் செயல்படுவதாகவே தெரிகிறது. கட்சியையோ, கட்சித் தலைவர்களையோ இணைத்து எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் இது போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினால் அவர்கள் மீது நிச்சயமாக சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் தொடர்வோம்.” என எச்சரித்தார்.
மேலும் படிக்க | திமுக கூட்டணி இறுதியானது... காங்கிரஸ் கட்சிக்கு 10 இடம் - அடுத்தது என்ன?
தேவையில்லாமல் அடிப்படை ஆதாரம் இல்லாமல் கட்சியை விட்டு வெளியே அனுப்பியவர் குறித்துப் பேசுகிறார்கள் என தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், தகவல் வந்தவுடன் கட்சியில் இருந்து ஜாபர் சாதிக்கை நீக்கி விட்டார்கள் எனக் கூறினார். குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் மீது குற்றம்சாட்டப்பட்டது, அவர் மீது குற்றப்பத்திரிக்கை கொடுத்துள்ளார்கள். அவரைப் பதவியிலிருந்து எடுத்தார்களா? என திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பினார். ஆளுநரும் அந்த வழக்கிற்கு அனுமதியே கொடுக்கவில்லை, உச்சநீதிமன்றத்திற்குச் சென்ற பிறகே விஜயபாஸ்கர் மீது மட்டுமல்லாமல் ரமணா மீதும் விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டது என அவர் கூறினார். போதைப் பொருளை ஒழிப்பதற்குத் தி.மு.க.வைப் போன்று எந்த கட்சியும் நடவடிக்கை எடுத்தது கிடையாது என்றும் திமுக எம்பி வில்சன் விளக்கமளித்தார்.
அவரின் இந்த பேட்டியை எக்ஸ் தளத்தில் டேக் செய்த சவுக்கு சங்கர், திமுகவுக்கு போதை மருந்து கடத்தல்ல சம்பந்தம் இருக்கு என கூறியுள்ளார்.மேலும், வழக்கு போடுங்க என்றும் சவால் விடுத்துள்ளார். அதாவது, ஜாபர் சாதிக் விவகாரத்தில் திமுக மற்றும் கட்சி தலைவர்களை தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்று கூறிய நிலையில், சவுக்கு சங்கர் இப்படியான கருத்தை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதனால், அவர் மீது திமுக சட்ட நடவடிக்கையை எடுக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதனிடையே, சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதியும் திமுக மீது அவதூறு பரப்பப்படுவதாக குற்றம்சாட்டினார். செய்தியாளர்களை சந்தித்த அவர், "திமுகவைக் களங்கப்படுத்தும் நோக்கோடு பாஜக செய்யும் அரசியல் தமிழ்நாட்டிலும் ஈடேறாது. அகில இந்திய அளவிலும் ஈடேறாது. பாஜக அரசின் சர்வாதிகார பிடியில் இருந்து இந்தியாவை மீட்க வேண்டும், நாட்டை விடுவிக்க வேண்டும் என்பதற்காக அகில இந்திய அளவில் அணி திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்துக் கொண்டிருக்கும் திமுக தேர்தல் களத்தில் களங்கப்படுத்தி, அரசியல் ஆதாயம் பெற்றுவிடலாம் என்று பாஜக தப்பு கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குத் துணையாக அதிமுகவும் துதி பாடிக்கொண்டிருக்கின்றது." என்று கூறினார்.
மேலும் படிக்க | கமல்ஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டுள்ளது - அண்ணாமலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ