மனித கடத்தலுக்கு திமுக உதவுகிறது - வானதி சீனிவாசன்

மனித கடத்தலுக்கு திமுக நிர்வாகிகள் உதவுவதாக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 2, 2022, 06:55 PM IST
  • மனித கடத்தலுக்கு திமுக நிர்வாகிகள் உதவுவதாக குற்றச்சாட்டு
  • கட்சி தலைவர்கள் ஜனநாயக ரீதியாக நடக்க வேண்டுமென அறிவுறுத்தல்
  • அப்படி இல்லாவிட்டால் மகாராஷ்டிரா நிலைதான் தமிழகத்துக்கும் என வானதி எச்சரிக்கை
மனித கடத்தலுக்கு திமுக உதவுகிறது - வானதி சீனிவாசன் title=

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "75ஆவது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஒரு கோடி தேசிய கொடியை ஏற்றுவதற்கு பாஜக சார்பில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கோவை கெம்பனூரை அடுத்த அட்டுக்கல் கிராமத்தில் செயல்பட்ட ஆதரவற்றவர்களுக்காக இல்ல பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டும் இதுவரை உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. மனிதக் கடத்தல் நிறுவனத்துக்கு மறைமுகமாக திமுக நிர்வாகிகள் உதவுகிறார்கள். எனவே, அந்நிறுவனத்தை நடத்துபவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும். இப்பிரச்சினை குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பாஜக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

அதனைத் தொடர்ந்து, கோவை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பிரதமர் மோடி படத்துடன் 'தமிழகத்தில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம்' என்ற வாசகத்துடன் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "அந்த ஆட்டம் வேகமான ஆட்டமா, மெதுவான ஆட்டமா என இனிவரும் காலங்களில் பார்க்கலாம். தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.\

மேலும் படிக்க | தந்திரமாக நுழையும் இந்தி - ‘வெறியர்கள்’ என பகிரங்கமாக விமர்சித்த எம்.பி. சு.வெங்கடேசன்!

மகாராஷ்டிராவில் நடந்த விஷயம் பாஜகவால் திட்டமிடப்பட்டு, வேண்டுமென்ற ஆசை காட்டி செய்யப்படவில்லை. கட்சியை நடத்தக் கூடியவர்கள், கட்சியின் தலைவர்கள் ஆகியோர் கட்சிக்காக வேலை செய்தவர்கள், கட்சியை வளர்த்தவர்களை புறந்தள்ளிவிட்டு தனது மகன், மருமகன், மனைவி என்று பொறுப்பு அளிக்கும்போது, அந்த கட்சியிலிருந்து நிர்வாகிகளே பாஜகவை தேடி வருகிறார்கள்.

அதற்கு எங்கள் மீது யாரும் குறைகூற வேண்டாம். கட்சியின் தலைவர்கள் ஜனநாயக ரீதியாக நடந்து கொள்ளாவிட்டால், மகாராஷ்டிராவில் நடந்ததைப்போல தமிழகத்தில் மட்டுமல்ல, பல்வேறு மாநிலங்களில் நடக்க வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.

மேலும் படிக்க | தாய்ப்பாலில் நஞ்சைக் கலப்பதா ? - ஆற்றில் ரசாயனக் கழிவுகளை கலக்கும் தொழிற்சாலைகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News