Erode East By-Election Latest News Updates: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடாது எனவும் திமுகவே போட்டியிடும் எனவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செவ்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து செல்வப்பெருந்தகை இன்று (ஜன. 10) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், "ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப். 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் (EVKS Elangovan) மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் மறைவு அடைந்ததையோட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே… pic.twitter.com/4JnjWznTIs
— Selvaperunthagai K (@SPK_TNCC) January 10, 2025
முதல் முறையாக கேட்ட மு.க.ஸ்டாலின்...
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், முதலமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின், முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச் செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு: 2021, 2023இல் காங்கிரஸ்
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், திமுக கூட்டணி ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில் காங்கிரஸ் தரப்பில் தமிழ்மகன் ஈவெரா போட்டியிட்டு வென்றார். மேலும், தமிழ்மகன் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது தமிழ்மகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு 2023 மார்ச்சில் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வானார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த டிச. 14ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு பின் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி மற்றும் அட்டவணையை கடந்த ஜன.7ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால், மீண்டும் காங்கிரஸ் வேட்பாளரே போட்டியிடுவார் என்றும், ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் எனவும் பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இந்த தொகுதியை தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிப்.8இல் வாக்கு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், ஜன. 17ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. வேட்பு மனுவை ஜன.19ஆம் தேதி வரை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். பிப். 5ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவும், பிப். 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.
மேலும் படிக்க | Pongal 2025: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை - அரசின் கடைசி நேர அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ