Jaggery Drink In Every Morning, Health Tips: வெல்லம் நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பொருள்களுக்குள் ஒன்று. வெள்ளை சர்க்கரை பரவலாக பயன்படுத்தப்படுவதற்கு முன்னர் அனைத்து வீடுகள், ஹோட்டல்கள், டீக்கடைகள் தொடங்கி அனைத்து இடங்களிலும் வெல்லமே ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், தற்போது வெள்ளை சர்க்கரை வந்த பின்னர் வெல்லத்தின் பயன்பாடு சற்றே குறைந்துவிட்டது எனலாம்.
இருப்பினும், சிலர் உடல் ஆரோக்கியம் கருதி வெல்லத்தை மட்டும் சேர்த்துக்கொள்ளும் பழக்கத்தை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக, வெள்ளை சர்க்கரையில் இல்லாத ஊட்டச்சத்துக்கள் இந்த வெல்லத்தில் இருப்பதால் பலரும் இதையே விரும்புகிறார்கள். வெல்லத்தில் இரும்புச்சத்து, பொட்டாஸியம், மெக்னீஸியம் போன்ற கனிமங்கள் நிறைந்திருக்கின்றன. அதேபோல், நார்ச்சத்தும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் உள்ளன.
அப்படியிருக்க வெல்லத்தை உங்கள் உணவுப் பழக்கவழக்கத்தில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான ஒன்றுதான். அதிலும் நீங்கள் தினமும் காலையில், நன்கு சுட வைத்த வெந்நீரில் வெல்லத்தை நன்கு பொடியாக்கி கலந்து இதமான சூட்டில் குடித்தால் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வெல்லம் கலந்த சுடு தண்ணீரை தினமும் குடித்து வந்தால் கிடைக்கும் நன்மைகளை இங்கு விரிவாக காணலாம்.
மேலும் படிக்க | சோடியம் குறைந்தால் நரம்பு மண்டலம் பாதிக்கும்.... தவிர்க்க உதவும் சில உணவுகள்
நச்சுக்களை வெளியேற்றும்
நீங்கள் தினமும் காலையில் வெல்லம் கலந்த சுடு தண்ணீரை குடிப்பதனால் உங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறும் வாய்ப்பு ஏற்படும். இது செரிமான அமைப்பில் உள்ள அசுத்தங்களை நீக்கி நச்சுக்களை வெளியேற்றும். மேலும் ஆரோக்கியமான குடல் இயக்கத்திற்கும் வழி வகுக்கும். கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியத்திற்கும் இது நல்லது.
சளி, இருமல், ஜலதோஷத்திற்கு நிவாரணி
நுரையீரல் சார்ந்த பிரச்சினை இருப்பவர்களுக்கும் இந்த பானம் ஓர் அமிர்தமாகும். குறிப்பாக இதனை நீங்கள் சூடாக குடிப்பதன் மூலம் நுரையீரலில் தேங்கி இருக்கும் சளி வெளியேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் இது இருமல், ஜலதோஷம் ஆகிய உடல்நலப் பிரச்னைகளுக்கும் நிவாரணமாக அமைகிறது. மூச்சு விடுவதில் சிரமப்படுபவர்கள், இதனை தினமும் அருந்துவதன் மூலம் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்
இயற்கையாகவே உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குவதற்கு வெல்லம் கலந்த சுடு தண்ணீரை தினமும் குடிக்கலாம். இதில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள், கனிமங்கள் நிறைந்து இருப்பதால் உடலில் உள்ள கெட்ட செல்கள் அனைத்தும் வெளியேறி தொற்றுகளில் இருந்து உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்குவதன் மூலம் உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.
மேலும் படிக்க | உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை காலி செய்யும்... சில ஆபத்தான உணவுகள்
எலும்புகளுக்கு நல்லது
வெல்லத்தில் அதிக கனிமங்கள் இருப்பதால் இந்த பானம் எலும்புகளுக்கும் ஆரோக்கியமானதாக அமைகிறது. கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான கனிமங்கள் இதில் நிறைந்து இருக்கின்றன. இவை எலும்புகளை பலமாக்குவது மட்டுமின்றி எலும்பு சார்ந்த நோய்கள் உங்களை அண்டாமலும் பார்த்துக் கொள்ளும்.
நாள் முழுவதும் எனர்ஜியாக இருப்பீர்கள்
நீங்கள் நாள் முழுவதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு, தினமும் காலையில் இந்த பானத்தை மறக்காமல் குடியுங்கள். இதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால் உங்களின் ஹீமோகுளோபின் அளவும் உயரும். இதனால் நீங்கள் சோர்வாகவோ, சோம்பேறித்தனமாகவோ உணர மாட்டீர்கள். கார்போஹைட்ரேட் நிறைந்திருப்பதால் சட்டென்று ஆற்றல் கிடைக்கும். எனவே காலையில் இதை குடித்துவிட்டு உங்களின் நாளை தொடங்குங்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதனை பின்பற்றுவதற்கு முன் மருத்துவர்களிடம் உரிய ஆலோசனை மேற்கொள்வது நல்லது. இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
மேலும் படிக்க | காபி vs டீ: எதில் நெய் கலந்து குடித்தால் உடல் எடை வேகமாக குறையும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ