VIRAT KOHLI: தொடர்ந்து தடுமாறும் கோலி.. கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறதா?

VIRAT KOHLI: கிரிக்கெட் உலகில் ஜாம்போவானாக திகழும் விராட் கோலி சமீப காலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் நிலையில், அதற்கு கவுண்டி கிரிக்கெட் தீர்வாகுமா என்பதை பார்க்கலாம். 

இந்திய கிரிக்கெட் அரங்கில் மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட் அரங்கிலும் ஜாம்போவானாக திகழ்பவர் விராட் கோலி. சச்சினுக்கு அடுத்த படியாக அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையுடன் வலம் வரும் இவர் தொடர்ச்சியாகச் சருக்கல்களைச் சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் 4th ஸ்டேம்ப், 5th ஸ்டேம்ப்பில் செல்லக்கூடிய பந்தில் தொடர்ந்து ஆட்டமிழந்து வெளியேறினார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது ஆட்டத்தை மேம்படுத்த கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்கத் திட்டமிட்டுள்ளார். இருப்பினும் இது 2025ஆம் ஆண்டு ஐபிஎல் பிளே ஆஃப்பில் அவரது உறுதிப்பாடுகளுடன் முரண்படக்கூடும். கவுண்டி கிரிக்கெட்டில் ஏன் கோலியின் பங்கேற்பு நேர்மானதாக இருக்காது என்பதை இங்குப் பார்க்கலாம். 

1 /8

பார்டர் கவாஸ்கர் தொடரில் 4வது மற்றும் 5வது ஸ்டேம்ப் லைனில் செல்லக்கூடிய பந்திற்குக் கோலி ஆட்டமிழந்தது, ஸ்விங் கண்டிசன்களில் பயிற்சிக்கான தேவையைக் காட்டுகிறது.

2 /8

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் கோலி கவுண்டி கிரிக்கெட் விளையாடுவது இங்கிலாந்தின் கண்டிசனுக்கு உதவியாக இருக்கும்.   

3 /8

ஐபிஎல்லில் அதிக ரன்கள் எடுத்த வீரராகவும், ஆர்சிபி அணியின் முக்கிய வீரராகவும் இருக்கும் கோலியின் இருப்பு கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பது நிச்சியமற்றதாக உள்ளது. 

4 /8

தேசிய தேர்வர்களின் தீவிர கண்காணிப்பில் விராட் கோலி உள்ளார். அவரது டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலம் இங்கிலாந்திற்கு எதிரான போட்டிகளில் அவரது செயல்திறனை பொறுத்து உள்ளது. 

5 /8

ரவி சாஸ்திரி மற்றும் தற்போதைய தலைமை பயிற்சியாளர் கவுதம் காம்பீர் கோலியை உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி ஃபார்மை மேம்படுத்த வலியுறுத்தி வருக்கின்றனர். 

6 /8

கோலி தற்போது பேட்டிங்கில் தடுமாறினாலும், அவர் ஃபார்மிற்கு திரும்பினால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட நாட்கள் விளையாட முடியும் என்பதை அவரது உடற்தகுதி உறுதிபடுத்தியுள்ளது.

7 /8

இங்கிலாந்து அணிக்கு எதிராக பந்தின் ஸ்விங்கை எதிர்கொள்ளக் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பது முக்கியமானதாக இருக்கலாம். 

8 /8

2027ஆம் ஆண்டு உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியை நீண்ட கால இலக்காகக் கொண்டு, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தவும், கோலி ஐபிஎல் கடமைகளையும் கவுண்டி கிரிக்கெட்களையும் சமநிலைபடுத்த வேண்டும்.