DMK+IJK: திமுக கூட்டணியில இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 தொகுதி

திமுகவுடன் தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி ஒரு தொகு ஒதுக்கப்பட்டு உள்ளது எனத்தகவல்.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 4, 2019, 04:47 PM IST
DMK+IJK: திமுக கூட்டணியில இந்திய ஜனநாயகக் கட்சிக்கு 1 தொகுதி title=

விரைவில் 2019 மக்களவை தேர்தல் வர உள்ளதால், தமிழகத்தை பொருத்த வரை அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வருகின்றனர். இன்று திமுக தலைமை மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் இந்திய ஜனநாயக கட்சி போன்ற கட்சிகளுடன் பேச்சுவாரத்தை நடத்தி வந்தது. 

இதில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் மதிமுகவுக்கு தலா இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என, அக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி இணைந்துள்ளது. திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்தார் அக்கட்சியின் நிறுவனர் பச்சமுத்து கூறியிருந்தார். அதன்பின்னர் தொடர்ந்து தொகுதி குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வந்தது. இன்று அதிகாரப்பூர்வமாக தொகுதி குறித்து உடன்பாடு ஏற்ப்பட்டது. வரும் மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி ஒரு தொகுதியும், திமுக சின்னத்தில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்ட்டு உள்ளது.

Trending News