தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்திலும் பரவலாக மழை பெய்தது. சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு,கடலூர் வேலூர், திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலமும் கனமழை மழை காரணமாக மிகுந்த பாதிப்பிற்குளானது.
இந்நிலையில், குமரியில் கனமழை காரணமாக ரயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று (22-11-21) 17 பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் விபரம்:
நாகர்கோவில்- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொல்லம் - திருவனந்தபுரம், திருவனந்தபுரம்- கொல்லம், நெல்லை - ஜாம்கர் விரைவு ரயில், நெல்லை-திருவனந்தபுரம், புனலூர் - மதுரை ரயில், புனலூர் - நெல்லை சிறப்பு ரயில்கள் இயங்காது என ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.
குமரி - பெங்களூரு கே.எஸ்.ஆர். விரைவு ரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாகர்கோவில் - கோட்டயம் சிறப்பு ரயில், நாகர்கோவில் - கொல்லம் இடையே செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | மழை பாதித்த பகுதிகளை இன்று ஆய்வு செய்கிறது மத்திய குழு
எழும்பூர் - குருவாயூர் விரைவு ரயில், நெல்லை - குருவாயூர் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொல்லம் - எழும்பூர் விரைவு ரயில் கொல்லம், நாகர்கோவில் இடையே இயங்காது என கூறப்பட்டுள்ளது.
நாகர்கோவில்- மங்களூர் விரைவு, சிறப்பு ரயில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.
மங்களூர் - நாகர்கோவில் சிறப்பு ரயில் திருவனந்தபுரம் - நாகர்கோவில் சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
திருச்சி-திருவனந்தபுரம் சிறப்பு ரயில், நெல்லை - திருவனந்தபுரம் இடையே செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | கொலையான எஸ்.ஐ. பூமிநாதனின் கடைசி திக்.. திக்.. நிமிடங்கள்.. நடந்தது என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR