பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கடலூர் தந்தை கைது!

கடலூர் மாவட்டத்தில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்!

Last Updated : Jul 27, 2019, 12:37 PM IST
பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கடலூர் தந்தை கைது! title=

கடலூர் மாவட்டத்தில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்!

8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன கடலூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் குடம்ப பிரச்சணை காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகின்றார். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் அவர் கடந்த சில ஆண்டுகளாக தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகின்றார்.

இதனிடையே வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றிருந்த அந்த பெண்ணின் தந்தை முகம்மது அலி அண்மையில் வீடு திரும்பினார். வந்தவர் அந்த பெண்ணை கடுமையான வார்த்தைகளால் திட்டி தனது வீட்டை விட்டு வெளியேறுமாறு வற்புறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது பெண்னையே பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

அந்த பெண் இரவில் படுத்து உறங்கி கொண்டிருந்த போது, அவளது தந்தை அந்த பெண்ணை பலவந்தமாக வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார் இதனால் அந்த பெண்ணின் தாயார் ஆத்திரமடைந்து தட்டி கேட்டுள்ளார். இதில் கோபமடைந்த முகம்மது அலி, தனது மகளையும், மனைவியையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தாய் மற்றும் மகள் இருவரும் கடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் முகமது அலி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Trending News