சென்னை: சீனாவில் பரவும் கொடிய புதிய கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்காவை அடைந்துள்ளது. இதன காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சீனா அண்டை நாடு என்பதால், கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ வாய்ப்பு இருப்பதால், பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து சீனா செல்லும் பயணிகள் மற்றும் சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் விமான நிலையங்களிலேயே அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதனால் நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனையை செய்யப்படுகிறது. இதற்காக விமான நிலையத்தில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்மூலம் பயணிகள் அனைவரும் நல்ல உடல் நிலையில் உள்ளனரா என சோதிக்கப்படுகிறது.
சென்னை விமான நிலையத்திற்கு வரும் சீன பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த சென்னை விமானநிலையத்தில் சிறப்பு முகாம்களை மத்திய சுகாதாரத்துறை அமைத்துள்ளது. அதாவது மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சீனாவின் வுஹானில் கடந்த மாதம் ஒரு மர்ம வைரஸ் தாக்க தொடங்கியது தற்போது வரை குறைந்தது 17 பேரைக் கொன்றது மற்றும் உலகம் முழுவதும் நூற்றுக் கணக்கானவர்களைத் தொற்றியுள்ளது.
தேசிய சுகாதார நிறுவனங்கள் இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஆனால் மருத்துவ பரிசோதனைகள் தொடங்குவதற்கு குறைந்தது சில மாதங்கள் ஆகலாம் மற்றும் உண்மையில் இந்த கொரோனா வைரசுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒரு வருடத்திற்கும் மேலாகும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.