School Reopening: செப்டம்பர் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டம்

மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மாதக் கணக்கில் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்குகின்றன

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2021, 07:42 PM IST
  • தமிழகத்தில் செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகள் இயங்கும்
  • நிபுணர்களுடனான கலந்தாலாசோனைக்கு பிறகு தமிழக அரசு முடிவு
  • நீண்ட நாட்களாக ஆன்லைனில் கற்பதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படலாம்
School Reopening: செப்டம்பர் முதல் தேதியில் இருந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டம்   title=

கொரோனா நோய்த்தொற்று தொடர்பாக தமிழக முதலமைச்சர் இன்று மருத்துவ நிபுணர்களுடன் நடத்திய கலந்தாலோசனையின் அடிப்படையில் சில முடிவுகளை வெளியிட்டார். அதனடிப்படையில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

ஆலோசனைக்குப் பிறகு இரண்டு வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்பட்டது. லாக்டவுன் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டாலும், பள்ளிகளை திறப்பது தொடர்பாக பலரும் ஒரே கருத்தை முன்வைத்தார்கள்.

பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை ஒருமித்த கருத்தாக மருத்துவர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் வலியுறுத்தினார்கள். மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மாதக் கணக்கில் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை சுட்டிக் காட்டினார்கள்.

இந்த மன அழுத்தமானது எதிர்காலத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும், சமுதாயத்தில் மாணவர்கள் கற்றபதற்கான வாய்ப்புகளில் பெருத்த இடைவெளி ஏற்பட்டு வருவதையும் அனைவரும் முன்வைத்தனர். 

அதோடு  இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான மாணவர்களுக்கு கிடைக்காத சூழ்நிலை உள்ளதும் கற்றலில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது.

மாணவர்களின் நலன் தொடர்பான அனைத்து தரப்பினரின் கருத்துகளும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் எதிர்வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

50 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே வகுப்பறைகளில் இருக்க வேண்டும். கொரோனா தொற்று தொடர்பாக அரசு வெளியிட்டிருக்கும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவங்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.

ALSO READ: கொடைக்கானலில் இன்று முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்

அதையடுத்து, செப்டம்பர் முதல் தேதியில் இருந்து பள்ளிகளை தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ கல்வி நிறுவனங்கள், ஆகஸ்ட் 16 ஆம்  தேதியிலிருந்து செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும்.

மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

 Also Read | தமிழகத்தில் 2 வாரங்களுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகின்றது: முதல்வர் ஸ்டாலின்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News