தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் பாடை கட்டி போராடி வருகின்றனர்.
தமிழகத்தில் போதிய பருவமழை இன்றியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், விவசாய கடன்களை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கழுத்தில் மண்டை ஓடு மாலை அணிந்தும், சவம் போல் சாலையில் படுத்தும், தூக்குக் கயிறு கழுத்தில் மாட்டியும் பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டங்களை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் போராடி வருகின்றனர்.
தலைகீழாக நிற்கும் போராட்டம், மொட்டை அடிக்கும் போராட்டம், கொளுத்தும் வெயிலில் தரையில் உருளும் போராட்டம், கைகளை அறுத்து ரத்தம் சிந்தும் போராட்டம், தூக்கு கயிறு கழுத்தில் மாட்டிகொண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர்.
தொடர்ந்து 27வது நாளாக போராடி வரும் அவர்களை கண்டுகொள்ளாமல், மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இன்று விவசாயிகள் பாடை கட்டி நூதன முறையில் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.