FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...

ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

Written by - | Edited by - Mukesh M | Last Updated : Dec 16, 2019, 06:22 AM IST
FAST45 - ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகள்...  title=

ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

  • செய்தியுலகில்  Zee Hindustan புதிய புரட்சி -  புதிய சோதனைகள், புதிய தொடக்கங்களுக்கு தேசிய அங்கீகாரம்… இந்திய செய்தித்தாள் சங்கத்தின் சிறந்த செய்தி சேனல் விருது அளிப்பு
  • தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழி ஒளிபரப்புக்கான விருதை ஏற்றார் செய்திப்பிரிவு தலைவர் ரமேஷ்சந்திரா… நெறியாளர் அற்ற பன்முக வடிவம் மக்களின் வரவேற்பை பெற்றதாக Zee Hindustan CEO மற்றும் தலைமை ஆசிரியர் புருஷோத்தம் வைஷ்ணவ் பாராட்டு
  • சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் விருதை பெற்றார் Zee Hindustan புரொட்யூஸர் மாதுரி கலால்… பத்திரிகை பிரபலங்கள் Zee Hindustan-க்கு பாராட்டு…
  • மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக்கூட்டம்…  தொழில், சேவை, வர்த்தகம், வேளாண் துறைகள் மற்றும் பொருளாதாரம் குறித்து முக்கிய ஆலோசனை
  • சென்னை விமானநிலையத்தில் 82 லட்ச ரூபாய் தங்கம் பறிமுதல்… கடத்தியவரிடம் தீவிர விசாரணை
  • குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கர்நாடகத்தின் கலபுரகியில் தர்ணா… ஜெகன்னாத் சர்க்கிளில் ஆர்ப்பாட்டம்…
  • வெண்கலத்தில் பிரமாண்டமான யட்சி சிலை வடிக்கும் பணி… பிரபல கேரள சிற்பி கன்னையா குன்கிராமனிடம் ஒப்படைப்பு
  • மத்தியப்பிரதேசம் மாண்ட்லாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டி… 5 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்பு… கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக ஏற்பாடு
  • உத்தராகண்ட்டில் 80 வயதில் பள்ளி இறுதித் தேர்வு எழுதிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் … 60 மதிப்பெண்களுடன் தேர்ச்சி… நீண்டநாள் கனவு நிறைவேறியதாக பெருமிதம்
  • உத்தரப்பிரதேசத்தின் சீதாபூரிலும் புல்லட் சவாரி, ஆன்ட்டி ரோமியோ படை தயார்… பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பல மாதங்கள் கடும் பயிற்சி…
  • குடியுரிமை சட்டத்துக்க எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை… விரைந்து விசாரிக்க கோரிக்கை
  • டெல்லி-NCR காற்று மாசுபாடு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை… முன்னதாக பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேச மாநில நிலவர அறிக்கைகள் தாக்கல்
  • தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் காவல்துறையினர் வழக்குறைஞர்கள் மோதல் சம்பவம்… போலீஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை கோரிய மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை
  • தேஜஸ்வி யாதவ் மீதான IRCTC டெண்டர் மோசடி வழக்கு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணை… பாஸ்போர்ட்டை புதுப்பிக்க தேஜஸ்வி விண்ணப்பம்… மாஜி ரயில்வே அமைச்சர் லாலு மீதும் ஊழல் குற்றச்சாட்டு
  • உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு தீர்ப்பு பற்றி இன்று தீஸ் ஹசாரி முடிவு… பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட MLA குல்தீப் செங்கர் உள்ளிட்டோர் தலைவிதி நிர்ணயம்
  • ஜார்க்கண்ட்டில் நான்காம் கட்டமாக 15 பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு… சுரங்கவயல்கள் நிறைந்த 13 தொகுதிகளும் அடக்கம்
  • பனிப்பொழிவினால் ஜம்மு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை நான்காவது நாளாக மூடல்… ஜவஹர் டனல், ராம்பம், பனிஹாலில் நிலச்சரிவால் பாதிப்பு
  • பனிமூட்டம் காரணமாக இன்று முதல் ஜனவரி 31 வரை 66 ரயில்கள் ரத்து… ஜனதா, பரேலி-பிரயாகை, பரேலி-வாராணசி, ஆக்ரா இன்டர் சிட்டி, பைஸாபாத்-கான்பூர் அன்வர்கஞ்ச் ஆகிய எக்பிரஸ் ரயில்களும் ரத்து
  • பனிமூட்டம் காரணமாக பஞ்சாப் செல்லும், கங்கா சட்லஜ், கைஃபியாத், மவ்-ஆனந்த விஹார் ரயில்கள் நிறுத்தம்
  • மொபைல் எண் போர்ட்டபிலிட்டிக்கு புதிய விதி… சேவை பகுதிக்குள் 3 வேலைநாட்களுக்குள்ளும், வேறு சர்க்கிள்களுக்குள் 5 நாள்களுக்குள்ளும் போர்ட் செய்ய கெடு
  • மத்தியப்பிரதேசத்தின் போபாலில் கலப்பட பாலுடன் அரசு டேங்கர் பறிமுதல்… 100 லிட்டர் கெமிக்கலில் 1500 லிட்டர் போலி பால் தயாரித்து கூட்டுறவு ஒன்றியத்துக்கு சப்ளை அம்பலம்… ஒருவர் கைது...
  • மத்தியப்பிரதேசத்தின் சாஞ்சி மாவட்ட கூட்டுறவு பால் ஒன்றியத்தில் கலப்பட பால் விநியோகம்…  நடவடிக்கை எடுக்க அமைச்சர் உறுதி... நிர்வாக மேலாளரிடம் விசாரணை
  • மத்தியப்பிரதேசத்தில் அரசு ஒன்றியத்தில் கலப்பட பால் விநியோகம்… தவறு செய்தவர்களை சிறைக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பதாக சட்ட அமைச்சர் சர்மா அறிவிப்பு
  • டெல்லியில் ஜாமியா மாணவர்களுக்கு ஜேஎன்யூ மாணவர்கள் ஆதரவு… காவல்துறை தலைமையகத்தில் கூட்டாக ஆர்ப்பாட்டம்… 
  • ஜாமியா பகுதியில் வன்முறையை தூண்டுவதாக ஆம் ஆத்மி மீது பாஜக குற்றச்சாட்டு… வன்முறையை தடுத்ததாக ஆம் ஆத்மி MLA அமானுதுல்லா பதில்
  • டெல்லியில் வன்முறை பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை… 15 மெட்ரோ ரயில்நிலையங்கள் மூடல்
  • NRC மற்றும் குடியுரிமை சட்டத்தை கண்டித்து மேற்குவங்கத்தில் ஆர்ப்பாட்டம்… 6 மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்… அஸாமில் 6 பேர் பலி
  • வீர சாவர்க்கர் பற்றிய ராகுல் காந்தி கருத்தை கண்டித்து மும்பையில் தர்ணா… காங்கிரஸ் மீது மாயாவதி பாய்ச்சல்… சிவசேனையுடன் கூட்டணி வைத்து இரட்டை வேடம் பூணுவதாக தாக்கு
  • மும்பையில் பிஎம்சி வாடிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்… முதல்வர் உத்தவ்தாக்கரே இல்லம், ரிசர்வ் வங்கி முன் குவிந்ததால் பரபரப்பு
  • போபாலில் கௌரவ பேராசிரியர்கள் வேலை நிறுத்தம்… பணி நியமனத்தை முறைப்படுத்துமாறு அரசுக்கு வலியுறுத்தல்
  • நீர்நிலைகளில் சட்டவிரோத கட்டுமானம்… போபால் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை… விதிகளை மீறிய கட்டடங்களுக்கு அபராதம்
  • தாண்டேவாடாவில் நக்ஸலைட்டுகள் சதி முறியடிப்பு… 10 கிலோ வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழப்பு… பர்காம்-பொடாலி இடையே வெடிகுண்டை புதைத்த நக்ஸல்கள்
  • இந்தூர் மாநகராட்சி ஊழியர்களுக்கு டிசம்பர் 23வரை வார விடுப்பு இல்லை… துப்புரவு ஆய்வுக்குழு இந்தூரில் சோதனையை தொடர்ந்து பொதுக்கழிவறைகள் சுத்திகரிப்பு
  • சாகர் சிறார் காப்பகத்திலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம்… போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை
  • பாட்னாவின் சிபாராவில் விபத்து எதிரொலி… பொதுமக்கள் ஆத்திரத்தில் லாரிகளுக்கு தீ வைப்பு… போலீஸார் தடியடி
  • பிகார் தேர்தல் பரபரப்புக்கு இடையே தந்தை லாலு பிரசாத்தை சந்தித்தார் தேஜஸ்வி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டிசம்பர் 21ஆம் தேதி போராட்டத்துக்கு அழைப்பு
  • பண்டியில் நடிகை பாயல் ரோத்தகி கைது… நேரு பற்றி அவதூறாக பேசியதாக வழக்கு  
  • உத்தராகண்ட்டில் கியர் பாக்ஸ் கோளாறு காரணமாக 125 புதிய பஸ்கள் டாடாவிடம் வாபஸ்… விலைக்கு வாங்கியபின் அதன் கோளாறு கண்டுபிடிப்பு
  • இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் விநோத போட்டி…  உரக்க கூச்சலிடும் சவால்… இல்லத்தரசிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  • நியூஜிலாந்தில் எரிமலை சீற்றத்தில் சிக்கி மேலும் இருவர் உயிரிழப்பு… பலி எண்ணிக்கை 15 ஆனது… 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி
  • பிகாரின் ஹக்ஸிபூரில் கூட்டுறவு தேர்தல் முறைகேடு… கள்ள ஓட்டை அனுமதித்ததாகக் கூறி தேர்தல் அதிகாரியை முற்றுகை
  • ராஜஸ்தானில் முதல்வர் கெலாட் தலைமையில் சட்டம் ஒழுங்கு ஆய்வு கூட்டம்… உள்துறை மற்றும் காவல் துறை உயர்அதிகாரிகளிடம் முக்கிய ஆலோசனை
  • ராஜஸ்தானின் சாதுல்பூரில் டேங்கர் லாரியுடன் கார் மோதல்… 4 பேர் பலி… 6 பேர் படுகாயம்
  • உத்தராண்ட்டில் சுற்றுலாப்பயணிகள் சி்க்கித் தவிப்பு… கடும் பனிப்பொழிவால் நைனிடால்-பாங்கூட் சாலை மூடல்… அன்றாட அலுவலுக்காக 30 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய அவலம்
  • உத்தராகண்ட்டில் கல்விக்கான ஸ்காலர்ஷிப்பில் மோசடி… போலி கல்லூரி பெயரில் 40 லட்ச ரூபாய் சுருட்டப்பட்டதால் அதிர்ச்சி… 7 பேர் மீது வழக்கு 

 

Trending News