இளம் மனைவியை கொன்று நாடகம்! கணவர் சிக்கிக்கொண்டது எப்படி? திருமணம் ஆன ஒரு மாதத்தில் இப்படியா?

காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jun 2, 2023, 11:50 AM IST
  • இளம் பெண் கொலை
  • கணவனின் நாடகம் அம்பலம்
  • கைது செய்த காவல்துறை
இளம் மனைவியை கொன்று நாடகம்! கணவர் சிக்கிக்கொண்டது எப்படி? திருமணம் ஆன ஒரு மாதத்தில் இப்படியா?  title=

கோவை மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரமணி. 20 வயதாகும் இவர் சஞ்சய் என்ற இளைஞரை காதலித்துள்ளார். இந்த ஜோடி கடந்த மாதம் 6-ம் தேதி தேதி வேளாங்கண்ணியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு ரமணி வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சஞ்சய் வீட்டில் ஆதரவு கொடுத்துள்ளனர். திருமணம் முடிந்து ரமணி, சஞ்சய் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் திடீரென ரமணி சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்துகொண்டதாக சஞ்சய் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் கூறியுள்ளார். அதோடு அவர்களும் ரமணிக்கு புளிக்கரைச்சலை வாயில் ஊற்றி முதலுதவி செய்துள்ளனர். அதன்பிறகு பூலுவம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்ற போது ரமணி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

அதன்பிறகு அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த ரமணியின் தந்தை கருப்புசாமி உயிரிழந்தது ரமணி தான் என்பதை உறுதி செய்ததார். அதோடு ரமணியின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக கருப்புசாமி ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதலில் இது சந்தேக மரணம் என்ற அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் ரமணியின் தந்தை புகார் அளித்ததை அடுத்து சஞ்சய் மற்றும் அவரது பெற்றோர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.  

மேலும் படிக்க | வெற்றியும், தோல்வியும் தற்காலிகமானதே: பி.டி.ஆர்

ரமணியின் பிரேத பரிசோதனை முடிவில், ரமணி கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்ததாக தகவல் கிடைத்தது.  இதனையடுத்து சஞ்சய்யிடம் பேரூர் துணை காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சஞ்சய் தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது. விசாரணையில்  சஞ்சய் அடிக்கடி தன்னுடன் கல்லூரியில் படிக்கும்  மாணவி ஒருவருடன் போனில் பேசி வந்ததாகவும், இதனால் ரமணி சண்டை போட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இந்த விவகாரம் மிகப்பெரியதாக வெடிக்கவே, சட்டென சஞ்சய் ரமணியின் கழுத்தை துப்பட்டாவால்  நெறித்து கொன்றுள்ளார். இதுகுறித்து தனது பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அந்த கொலையை மறைப்பதற்காக ரமணியின் வாயில் சாணி பவுடரை கரைத்து ஊற்றியதாக கூறப்படுகிறது. அதோடு அக்கம் பக்கத்தினரை அழைத்து உதவியும் கேட்டுள்ளனர். அவர்கள் புளிக்கரைச்சலை ரமணியின் வாயில் ஊற்றியுள்ளனர். ஆனாலும் அவர் அசையாததால், உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். 

அதன்பிறகு தான் பிரேத பரிசோதனையில் சிக்கிக்கொண்டுள்ளனர். இந்த வழக்கில் சஞ்சய் மற்றும் அவருக்கு உதவிய அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இளம்பெண்ணை கொலை செய்து அதனை மறைக்க தற்கொலை நாடகம் ஆடிய கணவன் உட்பட 3  பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் திருமணம் ஆகி முழுதாக ஒரு மாதம் கூட முடியாத நிலையில், காதல் மனைவி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க | கோடிக்கணக்கில் உயிரிழப்பு... இருந்தாலும் கோடியில் புரளும் சிகரெட் கம்பெனிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News