கோவை மாவட்டம், அம்மன் குளம் பகுதியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தூய்மை பணியாளர் கருப்புசாமி. திருமணமான இவருக்கு மகன் ஒருவர் உள்ளார். ஆனால், கருப்பசாமியின் தவறான நடத்தையின் காரணமாக மனைவி மற்றும் அவரது மகன் கருப்பசாமியை விட்டு தனியாக வாழ்ந்து வந்துள்ளனர். கருப்பசாமியைக் கண்டித்தும் அவர் மனைவியின் பேச்சைக் கேட்காமல் இருந்துள்ளார்.
தனியாக வசித்து வந்தபோதும் மனைவி மற்றும் மகன் ஆகியோர் கருப்பசாமி மீது அதிருப்தியாக இருந்துள்ளனர். அதே பகுதியில் இருக்கும் பெண்ணுடன் கருப்பசாமி தகாத உறவு வைத்திருந்தது மகன் சுரேஷூக்கு பிடிக்கவில்லை. இது குறித்து தந்தையிடம் பலமுறை சண்டையிட்டு தடுக்க முயன்றுள்ளார். மகனின் பேச்சையும் கேட்காத அவர், அந்த பெண் மட்டுமே முக்கியம் என இருந்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை கருப்பசாமியை பார்ப்பதற்காக மகன் சுரேஷ் சென்றுள்ளார். அப்போது, கருப்பசாமி தகாத உறவு வைத்திருக்கும் பெண்ணின் வீட்டில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றுள்ளார். மேலும், பணம் கொடுக்குமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது. கோபத்தின் விளிம்புக்கு சென்ற சுரேஷ், தந்தை என்றும் பாராமல் தான் மறைத்து எடுத்து வந்த கத்தியால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்து கருப்பசாமி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள கோவை ராமநாதபுரம் காவல்துறையினர், கொலை செய்த மகன் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். மகனே தகாத உறவு வைத்திருந்த தந்தையை கொலை செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | பரிகாரம் செய்வதாக மாணவியை பலாத்காரம் செய்த பூசாரி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR