கோவை ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்: மத்திய ரயில்வே அமைச்சர்

கோவை ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மாற்றப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ்  உறுதி அளித்துள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 15, 2022, 05:39 PM IST
  • கோவை ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மாற்ற ரயில்வே அமைச்சர் உறுதி.
  • கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்
  • மத்திய ரயில்வே அமைச்சரிடம் வானதி சீனிவாசன் நேரில் கோரிக்கை.
கோவை ரயில் நிலையம் உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றப்படும்: மத்திய ரயில்வே அமைச்சர் title=

மத்திய ரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களை டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து, கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர், பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் கடிதம் அளித்ததை அடுத்து, கோவை ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த நிலையமாக மாற்ற ரயில்வே அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

வானதி ஸ்ரீனிவாசன் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கோவை பகுதி மக்களின் ரயில்வே துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். ரயில் நிலையங்கள் மறுசீரமைப்புத் திட்டத்தின்கீழ் கோவை ரயில் நிலையத்தை, உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்ற வேண்டும். போதுமான வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளுடன் வட கோவை ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும்.

தமிழகம் மற்றும் கேரள மாநில மக்கள் பயன்பெறும் வகையில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலை, கோவை வரை நீட்டிக்க வேண்டும். கோவையிலிருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும்.

பாம்பன் ரயில்ப பாதை சீரமைப்புக்காக நிறுத்தப்பட்ட, மேட்டுப்பாளையத்திலிருந்து, கோவை வழியாக ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். அதுபோல கோவை பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, கோவையிலிருந்து, பெங்களூருவுக்கு இரவு நேர ரயில்களை இயக்க வேண்டும்.

கொரோனாவுக்கு முன்பு வரை, காலை 5.40 மணிக்கு  கோவையில் இருந்து புறப்பட்டு, காலை 6.45 மணிக்கு பொள்ளாச்சி வந்தடையும், கோவை - பொள்ளாச்சி ரயில் இயக்கப்பட்டது. அது போல, பொள்ளாச்சியில் இருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு, இரவு 9.45 மணிக்கு கோவைக்கு வந்து சேரும், 'பொள்ளாச்சி - கோவை ரயில்' கொரோனாவுக்கு முன்பு இயக்கப்பட்டது. இதனை மீண்டும் இயக்க வேண்டும் என்பது கோவை, பொள்ளாச்சி பகுதி மக்கள் நீண்ட நாள் கோரிக்கையாகும். இதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

மேலும் படிக்க | நளினி இந்திய மற்றும் தமிழக மக்களிடையே மன்னிப்பு கேட்க வேண்டும்: அனுஷா டெய்சி எர்னஸ்ட்

அதுபோல, பாலக்காட்டில் இருந்து கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக திருச்செந்தூர் வரை இயக்கப்பட்ட, 'பாலக்காடு - திருச்செந்தூர் -  பாலக்காடு' தினசரி ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு ரயில்களை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் அளித்த வாக்குறுதி

ரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்தபோது, இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, வானதி சீனிவாசனிடம் உறுதி அளித்தார். மத்திய அரசின் ரூ. 300 கோடி நிதியுதி திட்டத்தின்கீழ், கோவை ரயில் நிலையத்தை உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாற்றப்படும் என்றும் வானதி சீனிவாசனிடம், அமைச்சர் வாக்குறுதி அளித்தார்.

மேலும் படிக்க | அதிமுக ஆட்சியில் மெகா ஊழல்! மேல் விசாரணைக்கு அரசின் ஒப்பதல் தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News