கோவை: முதலமைச்சர் படம் அகற்றம், உதயநிதி பெயர் அழிப்பு..! தேர்தல் நடத்தை பணிகள் தீவிரம்

Coimbatore: கோவையில் லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் மாநகராட்சி ஊழியர்கள் உதயநிதி ஸ்டாலின் என எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்தனர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 16, 2024, 08:42 PM IST
  • கோவையில் தேர்தல் நடத்தைப் பணிகள் தீவிரம்
  • முதலமைச்சர் புகைப்படம் அகற்றம், உதயநிதி பெயர் அழிப்பு
  • தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
கோவை: முதலமைச்சர் படம் அகற்றம், உதயநிதி பெயர் அழிப்பு..! தேர்தல் நடத்தை பணிகள் தீவிரம் title=

லோக் சபா தேர்தல் 2024-க்கான தேதிகள் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதனையடுத்து, அதிகாரிகள் தேர்தல் தொடர்பான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டில் உடனடியாக மாவட்ட ஆட்சியர்கள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர். கோவை மாவட்டத்தில் முதல்கட்ட பணிகளாக அரசியல் கட்சியினரின் விளம்பரங்கள் அனைத்தும் மறைக்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்பான சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படுகின்றன. 

அதாவது, கோவையில் இருக்கும் சுவர் விளம்பரங்கள் மீதும் வெள்ளை பெயிண்ட்கள் அடிக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சியினரின் பதாகைகளும் அகற்றப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்படும் அரசு வாகனங்களில் தேர்தல் அவசரம் என்ற ஸ்டிக்கர் ஒட்டி ஜிபிஎஸ் கருவிகள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லைப் பகுதிகளில் தடுப்புகள் அமைப்பது, கண்காணிப்பு மேற்கொள்வது போன்ற பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | Zee News கருத்துக்கணிப்பு: தமிழ்நாட்டில் யாருக்கு அதிக இடங்கள்...? பாஜகவுக்கு வாய்ப்பிருக்கா?

தமிழ்நாட்டில் தேர்தல் எப்போது?

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற இருக்கிறது. வேட்புமனு தாக்கல் துவக்கம் மார்ச் 20 ஆம் தேதி, அதாவது வரும் புதன்கிழமை தொடங்குகிறது. மார்ச் 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல்  முடிவடைகிறது. தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி நடைபெறுகிறது, மார்ச் 30 ஆம் தேதி வேட்புமனுவை திரும்பப்பெறுவதற்கான கடைசி நாளாகும். அரசியல் கட்சிகள் ஏப்ரல் 17 ஆம் தேதி மாலை வரை பிரச்சாரம் செய்யலாம்.

தேர்தல் நடத்தை விதிகள் தெரிந்து கொள்ளவும்

தேர்தல் சமயத்தில் வதந்தி அல்லது பொய் செய்திகள் பரப்பவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும், தேர்தல் தொடர்பான போலி செய்திகளை நீக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை, சாதி, மதத்தை வைத்து பரப்புரையில் ஈடுபடக்கூடாது. 50% வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவு இணையவழியில் நேரலை செய்யப்படும். தலைவர்களின் தனி விமானங்கள் அவர்களது வாகனங்கள் சோதனைக்கு உள்ளாக்கப்படும். மதுபான ஆலைகளின் உற்பத்தி மற்றும் விற்பனை கண்காணிக்கப்படும்.

லைசென்ஸ் பெற்று வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தேர்தல் முடியும் வரை ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. ஜாதி மத ரீதியான பிரச்சாரங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது, தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து கருத்துக்கள் கூடாது, ஆன்லைன் பரிவர்த்தனைகள் முற்றிலும் கண்காணிக்கப்படும் என தெரிவித்திருக்கும் இந்திய தேர்தல் ஆணையம்நட்சத்திர பேச்சாளர்கள் நாகரிக முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News