கோவை சித்தா புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். இவரது கார் கால் டாக்ஸி அந்த பகுதிகளில் ஓடி வருகிறது. இவரது காரில் ரமேஷ் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோகோ cbe city என்ற பெட்ரோல் பங்கில் 39.90 லிட்டர் பெட்ரோல் 4,119 ரூபாய்க்கு பெட்ரோல் அடித்து உள்ளார்.
அதன் பின்னர் ஆவாரம்பாளையம் பகுதியில் செல்லும் பொழுது இந்த கார் பாதி வழியில் நின்று உள்ளது. அங்கிருந்த கார் மெக்கானிக்கை அழைத்துக் கொண்டு கொண்டு காரை சோதித்த போது பெட்ரோல் டேங்க முழுவதும் தண்ணீர் இருந்து உள்ளது. இதனை பார்த்த ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பெட்ரோல் பங்குக்கு விரைந்து சென்று பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீர் இருந்து உள்ளதாக தெரிவித்து உள்ளார். பெட்ரோல் பங்க் நிர்வாகிகள் அதற்கு சரியான பதிலை தரவில்லை.
பின்னர் ரமேஷ் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் நந்தகோபால் இந்தியன் ஆயில் பொறியாளர்களிடம் பேசி உள்ளோம். அவர்கள் வந்து அடிக்க பட்ட பெட்ரோல் பம்ப் ஆய்வுக்கு உட்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளார். இதனால் அந்த பெட்ரோல் பங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க | நீட் தேர்வில் இடஒதுக்கீட்டுக் கொள்கை! அரசிடம் பதில் கோரும் உச்ச நீதிமன்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ