நீலகிரியில் ₹.447.32 கோடியில் அரசு மருத்துக் கல்லூரி; அடிக்கல் நாட்டினார் EPS!

நீலகிரி மாவட்டத்தில் ரூ.447.32 கோடி மதிப்பில் 40 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள அரசு மருத்துக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!!

Last Updated : Jul 10, 2020, 01:38 PM IST
நீலகிரியில் ₹.447.32 கோடியில் அரசு மருத்துக் கல்லூரி; அடிக்கல் நாட்டினார் EPS! title=

நீலகிரி மாவட்டத்தில் ரூ.447.32 கோடி மதிப்பில் 40 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள அரசு மருத்துக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்!!

நீலகிரி மாவட்டம் உதகையில் 25 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.447.32 கோடி மதிப்பில் 25 ஏக்கர் பரப்பில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 

மத்திய அரசு தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்தது. அதனடிப்படையில், ராமநாதபுரம், விருதுநகா், திண்டுக்கல், நாமக்கல், திருப்பூா், திருவள்ளூா், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூா், நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக ரூ.3 ஆயிரத்து 575 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், மத்திய அரசு, மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் கல்லூரிகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 10 புதிய மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு கட்டட பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 20 அரசு மருத்துவ கல்லூரிகளும், ஒரு ESI மருத்துவக் கல்லூரியும் உள்ளன. 

READ | மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சியில் 100 மின்னணு சார்ஜிங் நிலையங்கள்...

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகமண்டலத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில், 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள பதினொன்றாவது புதிய மருத்துவக் கல்லூரிக்கு சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். மத்திய அரசு 60 சதவீத நிதிபங்களிப்புடனும், மாநில அரசின் 40 % பங்களிப்புடனும் கட்டுமானப் பணிகள் நடைபெறவுள்ளன. இந்த புதிய மருத்துவக்கல்லூரியுடன், மருத்துவமனை மூலம் தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 150 மருத்துவ இடங்கள் கிடைக்கும். புதிதாக 11 கல்லூரிகள் கட்டப்படும் போது அரசு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 31 ஆக உயரும். புதிய கல்லூரிகளால் மருத்துவ இடங்களின் எண்ணிக்கையும் உயருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Trending News