லஞ்சம் கொடுத்தால் சிறையில் ’சொகுசுவசதி’ - பப்ஜி மதன் மனைவி வெளியிட்ட ஆதாரம்

சிறையில் சொகுசு வசதி செய்து தருவதாகக்கூறி பப்ஜி மதன் மனைவியிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் சிறைத்துறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 4, 2022, 03:54 PM IST
  • பப்ஜி மதன் மனைவியிடம் பேரம் பேசிய ஆடியோ லீக்
  • சிறையில் சொகுசு வசதி செய்து தருவதாக உறுதி
  • சிறைக்காவலர் பணியிடை நீக்கம்
லஞ்சம் கொடுத்தால் சிறையில் ’சொகுசுவசதி’ - பப்ஜி மதன் மனைவி வெளியிட்ட ஆதாரம் title=

சேலத்தைச் சேர்ந்த பப்ஜி மதன், ஆன்லைன் கேம் விளையாடும்போது ஆபாசமாக பேசி, அதனை யூடியூப்பில் பதிவேற்றி பணம் சம்பாதித்து வந்தார். அவரின் இந்த ஆபாச பேச்சுகள் இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியதால், காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதனடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை தேடியபோது தலைமறைவான அவர், பல நாட்களுக்குப் பிறகு கைதானர். இந்த புகாரில் அவருடைய மனைவி கிருத்திகாவும் கைது செய்யப்பட்டு, ஜாமினில் வெளியே வந்தார்.

ALSO READ | PUBG GAME: பப்ஜி மதனுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி!

ஆன்லைன் ஆபாச பேச்சு புகார்கள் மட்டுமின்றி, பப்ஜி மதன் மீது பண மோசடி புகார்களும் குவிந்ததால் வழக்கை தீவிரமாக விசாரித்த காவல்துறை, அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தது. இந்நிலையில், சிறையில் தண்டனை அனுபவித்து வரும் அவருக்கு, சொகுசு வசதிகள் செய்து கொடுக்க சிறைத்துறை அதிகாரிகள் பப்ஜி மதன் மனைவியிடம் பேரம் பேசியுள்ளனர். 

மேலும், 25 ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான ஆடியோவும், கூகுள் பே மூலம் பணம் அனுப்பப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டும் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத்துறை டிஜிபி சுனில்குமார் சிங், இந்த புகாரின் உண்மைத் தன்மை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், இதில் தொடர்புடையதாக கருதப்படும் சிறைத்துறை அதிகாரி செல்வம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ALSO READ | PUBG Mobile பிரியர்களுக்கு Good News! இந்தியாவில் விரைவில் அறிமுகம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News