TN Elections 2021: நாளை வாக்கு எண்ணிக்கை; காவல் துறை கூறுவது என்ன

சென்னையில்,  குயின்ஸ் மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 1, 2021, 06:36 PM IST
  • சென்னையில் காவல்துறையின் முழு அதிகார வரம்பிலும் உள்ள அனைத்து முக்கியமான இடங்களிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • வாக்கு எண்ணும் மையங்களுக்கு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே வர வேண்டும்.
  • COVID-19 பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே எந்தவொரு கூட்டமும் கூட தடைசெய்யப்பட்டுள்ளது
TN Elections 2021: நாளை வாக்கு எண்ணிக்கை; காவல் துறை கூறுவது என்ன title=

தமிழகத்தில், சென்ற ஏப்ரல் 6ம் தேதி நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள், நாளை எண்ணப்படும்.சென்னையில்,  குயின்ஸ் மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

இந்த நான்கு மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை அமைதியாக இருப்பதை உறுதி செய்வதற்காக சென்னையில் காவல்துறையின் முழு அதிகார வரம்பிலும் உள்ள அனைத்து முக்கியமான இடங்களிலும், சந்திப்புகளிலும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அரசியல் கட்சிகளின் முகவர்கள் மற்றும் வேட்பாளர்களிடம், கோவிட் -19 நெறிமுறைகளை பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

வாக்கு எண்ணும் மையங்களுக்கு அங்கீகாரம் பெற்றவர்கள் மட்டுமே வர வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. லாக்டவுனை கருத்தில் கொண்டு வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் பிற முகவர்கள் தவிர வேறு எந்த நபருக்கும் அனுமதி இல்லை. தற்போதுள்ள COVID-19 பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே எந்தவொரு கூட்டமும் கூட தடைசெய்யப்பட்டுள்ளது.

ALSO READ | தேர்தல் வெற்றியை முடிவு செய்வது, மின்னணுவா, மக்களின் மனமா!

விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள காவல் துறை, வேட்பாளர்கள், தலைமை முகவர்கள்,  பத்திரிகையாளர்கள், வாக்கு எண்ணும் பணியில் உள்ளவர்கள்  பாஸ் வைத்திருப்பவர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வேட்பாளர்கள், முகவர்கள்  COVID-19 நெகடிவ் சான்றிதழ் (அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட RT-PCR சோதனை) அல்லது இரண்டு டோஸ்  தடுப்பூசி சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

ஒவ்வொரு எண்ணும் மையத்தின் நுழைவாயிலிலும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும். உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டிற்குக் குறைவாக இருக்க வேண்டும்.  அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் ஆணைய பாஸ் வைத்திருப்பவர்கள் கையில் வைத்திருக்கும் கேமராக்கள் உடன் அனுமதிக்கப்படுவார்கள்.

செல்போன்கள், கேமராக்கள், துப்பாக்கிகள், வெடிக்கும் பொருட்கள், பேனா கத்திகள், குச்சிகள், தண்ணீர் பாட்டில்கள், டின்கள்,  லைட்டர்கள், திரவங்கள் அல்லது ரசாயனங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையத்திற்குள் கூர்மையான பொருள்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.

வெற்றி ஊர்வலங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஏற்கனவே தடை விதித்துள்ளது. வெற்றி சான்றிதழைப் பெற வேட்பாளருடன் இரண்டு நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

ALSO READ | நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என அதிமுக நம்பிக்கை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News