புத்தாண்டிற்காக சென்னை மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு!

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12.30 வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Last Updated : Dec 30, 2017, 12:58 PM IST
புத்தாண்டிற்காக சென்னை மெட்ரோ ரயில் சேவை நீடிப்பு! title=

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புத்தாண்டு துவங்குகிறது. பொதுவாக புத்தாண்டை கடற்கரையிலும், நட்சத்திர விடுதிகளிலும், பொது இடங்களிலும் மக்கள் கொண்டாடி மகிழ்வார்கள். 

இந்நிலையில், ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, வரும் ஞாயிற்றுகிழமை நள்ளிரவு 12.30 வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் சேவை பொதுவாக காலை 6 மணி முதல் இரவு 10 வரை மட்டுமே இயக்கப்படுவது வழக்கம். ஆனால், புத்தாண்டையொட்டி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக மெட்ரோ சேவையின் நேரத்தை நீட்டிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

Trending News