தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.....
வடகிழக்கு திசையில் இருந்து வீசும் பருவக்காற்று காரணமாக தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக பெய்து வந்த நிலையில், தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் புவியரசன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை, தமிழகம், புதுச்சேரி, கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகாவில் இன்றுடன் முடிவடைகிறது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை, அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்த பட்சம் 20 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும். உள்பகுதியில் மூடுபனியும், நீலகிரியின் மலைப்பகுதிகளில் உறைபனியும் நிலவும். இவ்வாறு அவர் கூறினார்.