சென்னையில் பிளான் போட்டு மகா கொள்ளை... கோடீஸ்வர வீடுகளில் இருந்து தங்கம், வைரம் அபேஸ்..!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும் கோடீஸ்வரர்களின் வீடுகளை குறி வைத்து நடைபெற்ற கொள்ளை குறித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இது குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 31, 2024, 09:27 AM IST
  • சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கொள்ளை
  • கோடீஸ்வரர் வீட்டில் இருந்து தங்கம், வைரம் திருட்டு
  • புகாரின் அடிப்படையில் காவல்துறை தீவிர விசாரணை
சென்னையில் பிளான் போட்டு மகா கொள்ளை...  கோடீஸ்வர வீடுகளில் இருந்து தங்கம், வைரம் அபேஸ்..! title=

சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் ஆலிவ் பீச் பகுதியில் தொழிலதிபர்கள், திரை பிரபலங்கள் என முக்கிய பிரமுகர்களின் சொகுசு வீடு உள்ளது. இந்த சொகுசு குடியிருப்புகளின் பின்புறம் காலி இடம் உள்ள நிலையில் ஜெர்மனியில் உள்ள ஒரு தொழிலதிபர் வீட்டின் பின்புறம் அடையாளம் தெரியாத நபர்கள் பின்பக்கம் கயிறு போட்டு மேலே வீட்டில் நுழைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள நீலாங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவல் அறிந்த நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொள்ளை அரங்கேறிய இடத்தை பார்வையிட்டு பின்னர் வீட்டின் உரிமையாளரான ஜெர்மனியில் உள்ள தொழிலதிபரின் மகன்களிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் வீட்டில் வைத்திருந்த தங்க நகை, வைர நகை, ரொக்கப் பணம் என பல கோடி மதிப்பிலானவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறியுள்ளனர். அதை தொடர்ந்து நீலாங்கரை உதவி ஆணையர் பரத் தலைமையிலும், குற்றப்பிரிவு ஆய்வாளர் புகழேந்தி தலைமையிலும் தனிப்படை அமைத்து சொகுசு வீட்டில் துணிச்சலாக கைவரிசை காட்டியது யார் என்பது குறித்து புலன் விசாரணையை துவங்கினர். 

மேலும் படிக்க | குரூப்-4 தேர்வுத் தேதி அறிவிப்பு

மேலும், கிழக்கு கடற்கரை சாலையில் போலீசார் தரப்பில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும், அதேபோல் அருகில் உள்ள வீடுகளில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தும் விசாரணை மேற்கொண்டதில் இதுவரை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பதை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பல வருடங்களுக்கு பிறகு சொகுசு வீட்டில் பல கோடி மதிப்பிலான தங்கம், வைரம், ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளை போனது குறித்து அடையார் துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டார். 

மேலும் வீட்டின் உரிமையாளர் ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு நாளை வரவுள்ள நிலையில், அவர் வந்த பிறகே எவ்வளவு மதிப்பிலான நகைகள் மற்றும் பணம் கொள்ளை போனது என்பது குறித்து முழுமையாக தெரியவரும் என போலீசார் தரப்பில் கூறினர். சொகுசு வீட்டின் பின்புறம் இருள் சூழ்ந்து காலி இடமாக காட்சியளித்த நிலையில் அதை நோட்டமிட்டு திட்டம் தீட்டி வீட்டில் உரிமையாளர் இல்லாததை தெரிந்து கொண்டு பின்பக்கம் கயிறு போட்டு மேலே ஏரி வீட்டில் நுழைந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிருப்பது சொகுசு வீடுகள் உள்ள பகுதியில் பாதுகாப்பு இல்லாதது குறித்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | மோடி வெற்றி பெற்றால் அதிபர் ஆட்சி முறைக்கு இந்தியா மாறும் - ஆ.ராசா எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News