சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எம்ஜிஆர் ரயில் நிலையம் என அழைக்கப்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் அதிமுக கூட்டணியின் முதல் பிரச்சாரக் கூட்டம், சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய பிரதமர் மோடி,
முதலில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர் " உலகின் தொன்மையான மொழி தமிழ் என்றும், ஜெயலலிதா கனவு கொண்டது போல், வளர்ச்சி மிக்க தமிழகத்தை உருவாகுவோம் என்றும், எம்ஜிஆர் ஏழை எளிய மக்களுக்கு பாடுபட்டவர். ஆகவே, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் பெயரில் அழைக்கப்படும்.