சென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி... ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Chennai Cellphone shop owner kidnapped : சென்னை பட்டினம்பாக்கத்தில் செல்போன் கடை உரிமையாளர் கடத்தி 50 லட்சம் பணத்தை வாங்கி கொண்டு விடுவித்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 25, 2024, 07:26 AM IST
  • செல்போனில் இரவு பார்ட்டிக்கு அழைத்த அழகி
  • ஆசையாக சென்ற செல்போன் கடை உரிமையாளர்
  • கடத்திச் சென்று 50 லட்சம் ரூபாய் பறித்த கும்பல்
சென்னை : இரவு பார்ட்டிக்கு அழைத்த பெண் அழகி... ஆசையாக சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி title=

சென்னை பர்மா பஜாரில் செல்போன் கடை வைத்திருக்கும் ஜாவித் சைபுதீன் (32) என்பவருடன் பெண் ஒருவர் செல்போனில் பழகி வந்துள்ளார். அவர் தங்கள் வீட்டில் இரவு பார்ட்டி நடப்பதாக ஜாவித் சைபுதீனை வரவழைத்துள்ளார். இதனை நம்பி சென்ற அவரை, அங்கு தயாராக இருந்த ஒரு கும்பல் மூலம் கடத்தி சென்றுள்ளது. அத்துடன் 50 லட்சம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் விடுவிப்போம் என அந்த கும்பல் மிரட்டியதாகவும் தெரிகிறது. உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் ஜாவீத் சைபுதீன், அந்த கும்பலிடம் 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை கொடுத்து தப்பித்து வந்ததாக தெரிகிறது. 

மேலும் படிக்க | சென்னை : காளிகாம்பாள் கோயில் அர்ச்சகரின் காமகளியாட்டம் - காவல்துறையிடம் 3 பேர் வாக்குமூலம்

இது குறித்து ஜாவித் சைபுதீன் காவல்துறையிடம் அளித்துள்ள புகாரில், தன்னுடன் செல்போனில் பழகி வந்த பெண் ஒருவர் அழைத்ததன் பேரில் இரவு பார்ட்டிக்கு சென்றதாகவும், அங்கு இருந்த கும்பல் கடந்த 17ஆம் தேதி தன்னை கடத்திச் சென்று 50 லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார். தன்னை கடத்திய கும்பல் மதுரவாயல் பகுதிக்கு கொண்டு சென்றதாகவும், பின் கடத்தல் கும்பல் உன்னை கை தனியாக கால் தனியாக வெட்டி கொலை செய்தால் தங்களுக்கு வேறு ஒரு நபர் ரூபாய் 30 லட்சம் பணம் தருவதாக கூறியுள்ளார் என மிரட்டியதாகவும் ஜாவித் சைபுதீன் தெரிவித்துள்ளார். 

மேலும் உன்னை கொலை செய்யக்கூடாது என்றால் ரூபாய் 50 லட்சம் பணம் வேண்டும் என கடத்தல் கும்பல் ஜாவித்திடம் தெரிவித்ததாகவும் அதற்கு ஜாவித் ரூபாய் 50 லட்சம் தருகிறேன் தன்னை கொலை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டதாகவும் அந்த புகாரில் ஜாவித் தெரிவித்துள்ளார். இதன் பேரில் ஜாவித் தனது சகோதரர்களுக்கு போன் செய்து ரூபாய் 50 லட்சம் பணம் வாங்கி கடத்தல்காரர்களுக்கு கொடுத்ததாகவும், பின் 18-ம் தேதி மாலை சேத்துப்பட்டு அருகே தன்னை கடத்தல் கும்பல் இறக்கிவிட்டு சென்றதாகவும் போலீசாரிடம் ஜாவித் தெரிவித்துள்ளார்.

மேலும், காவல்துறையிடம் புகார் அளித்தால் வீடு தேடி வந்து கொலை செய்வதாக அந்த கும்பல் கூறியதால் பயத்தில் இத்தனை நாட்களாக புகார் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கும் ஜாவித் சைபுதீன், இருப்பினும் தற்போது புகார் கொடுத்திருப்பதாகவும் காவல் நிலையத்தில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கடத்தல் கும்பலை காவல்துறையினர் தேட தொடங்கியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களையும் ஜாவித் சைபுதீனிடம் காவல்துறையினர் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளனர். ஒருவேளை அந்த கும்பல் கைது செய்யப்பட்டால், ஜாவித் சைபுதீனை மிரட்டி பணம் பறித்ததுபோல் இன்னும் யாரையெல்லாம் மிரட்டி பணம் பறித்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியாகவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் படிக்க | கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு எப்போது தெரியுமா? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News