இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை: விமானப் போக்குவரத்து துவங்கியது

மழையின் அளவு குறைந்து காற்றின் வேகமும் சற்று குறையவே, சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் அட்டவணையின் படி புறப்படத் தொடங்கின.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 26, 2020, 12:00 PM IST
  • நிவர் புயலுக்குப் பிறகு சென்னை நகரம் தனது இயல்பான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டது.
  • விமான நிலையம் தனது விமான இயக்கங்களைத் தொடக்கி விட்டது.
  • மெட்ரோ ரயில்கள் இன்னும் துவங்கவில்லை.
இயல்பு நிலைக்கு திரும்பும் சென்னை: விமானப் போக்குவரத்து துவங்கியது title=

சென்னை: வியாழக்கிழமை காலை, சென்னை விமான நிலையம் மீண்டும் விமான சேவைகளைத் தொடங்கியது.  மழையின் அளவு குறைந்து காற்றின் வேகமும் சற்று குறையவே, சென்னை விமான நிலையத்திலிருந்து விமானங்கள் அட்டவணையின் படி புறப்படத் தொடங்கின. இருப்பினும், வியாழக்கிழமை முதல் பாதி வரை மெட்ரோ நிலையங்கள் சேவைகளைத் தொடங்கவில்லை.

நிவர் புயலுக்குப் (Nivar Cyclone) பிறகு சென்னை நகரம் தனது இயல்பான நடவடிக்கைகளைத் தொடங்கி விட்டது. காலை 10.30 மணியளவில் கடைகளின் ஷட்டர்கள் திறக்கத் தொடங்கின. இருப்பினும், சென்னை நகரத்தின் பல பகுதிகள் நீர் தேக்கமும் உள்ளது. பல இடங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளதால் இயல்பு நிலைக்கு சிறிய அளவு இடையூறுகளும் உள்ளன. சென்னையின் பல இடங்களில் மரங்கள் விழுந்ததால், பலரது சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழகம் (Tamil Nadu) முழுவதும் ஆயிரக்கணக்கான் மக்கள் புயலுக்காக ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியிலும் நவம்பர் 26 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: நிவர் புயல்: நாகப்பட்டினத்தில் 45,000 க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களுக்கு மாற்றம்!

முன்னதாக, கடுமையான சூறாவளி புயல் புதுச்சேரி அருகே கடற்கரையை கடந்து மிதமான சூறாவளி புயலாக பலவீனமடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. சூறாவளி புயல் புதன்கிழமை பின் இரவிலிருந்து துவங்கி வியாழனன்று அதிகாலைப் பொழுதில் கடலைக் கடந்தது.

கடந்த ஆண்டுகளில் புயலால் விளைந்த பாதிப்புகளால் பாதிக்கப்பட்டிருந்த தமிழக மக்கள் நிவர் புயலை கண்டு பதட்டத்தில் இருந்தனர். கடந்த காலங்களில் தமிழகம் கண்ட புயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளின் நினைவுகள் நிர்வாகத்தையும் மக்களையும் சேர்ந்தே அச்சுறுத்தின.

எனினும், நிவர் புயல் தாக்கியபோது, அதை தமிழகம் திடமாக நின்று எதிர்கொண்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். நிவர் புயலால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இருப்பினும், கடந்த இரு தினங்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, சென்னையின் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. முடிச்சூர், மணிமங்கலம், வரதராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து செல்வதால் புறநகர் பகுதியில் 10,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

ALSO READ: நகர்ந்தது நிவர்: புயலை திடமாக எதிர்கொண்டு நிமிர்ந்தது தமிழகம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News