ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 திமுகவினர் மீது வழக்குப்பதிவு!!

ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 திமுகவினர் மீது 2 பிரிவுகளின்கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு!! 

Last Updated : Jun 24, 2018, 11:29 AM IST
ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 திமுகவினர் மீது வழக்குப்பதிவு!! title=

ஸ்டாலின் உள்ளிட்ட 1,111 திமுகவினர் மீது 2 பிரிவுகளின்கீழ் கிண்டி போலீசார் வழக்குப்பதிவு!! 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், பரமத்தி சாலை வழியாக அண்ணாநகருக்கு காரில் சென்றார். அப்போது கவர்னரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நாமக்கல் அண்ணா சிலை அருகே கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தை நடத்தினர். 

இதையடுத்து, ஆளுநர் சென்ற கார் மீது கருப்புக்கொடி, பலூன்களை வீசியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் கைது செய்தனர். 

இந்த நிலையில், தி.மு.க.வை சேர்ந்தவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், ஜெ. அன்பழகன் உள்ளிட்டோர் கருப்பு கொடி ஏந்தி கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நோக்கி நேற்று பேரணியாக சென்றனர்.

இதை தொடர்ந்து, ஆளுநர் மாளிகை முன் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக தொண்டர்கள் மற்றும் ஸ்டாலின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் 1,111 பேர் மீது அனுமதியின்றி சட்டவிரோத முறையில் கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் கிண்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Trending News