குழந்தை இறப்பு... கர்ப்பப்பை அகற்றம்... கர்ப்பிணி உயிரிழப்பு! நடந்தது என்ன?

சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது  

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Jun 20, 2023, 06:50 PM IST
  • பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழப்பு!
  • சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகார நிலைய சிகிச்சை
  • கர்ப்பப்பை அகற்ற காரணம் என்ன?
குழந்தை இறப்பு... கர்ப்பப்பை அகற்றம்... கர்ப்பிணி உயிரிழப்பு! நடந்தது என்ன? title=

சென்னை: சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகார நிலையத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் பிரசவத்தின் போது உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை இறப்பு..கர்ப்பப்பை அகற்றம்.. கர்ப்பிணி பெண் உயிரிழப்பு..! நடந்தது என்ன?

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நாகலுத்துமேடு பகுதியை சேர்ந்தவர் உதயராஜ். இவருக்கு கடந்த ஆண்டு செம்டர்பர் மாதம் ராஜேஸ்வரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. நீண்ட காலமாக காதலித்து வந்த இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் நிறைமாத கர்பிணியான ராஜேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10.00 மணியளவில் சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரவு முழுவதும் சுகபிரசவத்திற்காக செவிலியர்கள் முயற்சித்ததாகவும், திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில்,மருத்துவர்கள் யாரும் இல்லாமல் செவிலியர்களே ராஜேஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்ய முயன்றுள்ளனர். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்... திடீரென சீனுக்கு வந்த பொன்முடி - நடப்பது என்ன?

அதோடு குழந்தையும் இறந்த நிலையில் பிறந்துள்ளது. இதனையெடுத்து திங்கட்கிழமை மதியம் மருத்துவர் வந்து பரிசோதித்து காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ராஜேஷ்வரியை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடனடியாக கர்பப்பையை அகற்றினால் மட்டுமே ராஜேஷ்வரியை காப்பாற்ற முடியுமென கூறி அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். 

இதனையெடுத்து ராஜேஷ்வரி சுயநினைவை இழந்து ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார். அவரை திங்கட்கிழமை இரவு, மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள்  சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் செவ்வாய் கிழமை காலை ராஜேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட தாயும் சேயும் உயிரிழந்ததால் ஆத்திரமுற்ற உறவினர்கள்,சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு செவிலியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையெடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டாதை தொடர்ந்து, உயிரிழந்த ராஜேஸ்வரியின் குடும்பதார் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | உத்தரப்பிரதேசத்தில் 3 நாட்களில் 54 பேர் பலி! 400 பேர் மருத்துவமனையில்! காரணம் என்ன?

இதனையெடுத்து  காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார நகர்நல அலுவலர் அருள் நம்பி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம்  உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ராஜேஸ்வரி பிரசவத்திற்க்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கிருந்த ராஜேஸ்வரியின் பெற்றோர்கள், கணவர் உள்ளிட்ட யாரிடமும்  அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னதாக எவ்வித கையெழுத்தும் பெறாமலேயே தவறான முறையில் அறுவை சிகிச்சை செய்தது தான் அவரது உடல்நிலை மோசமானதுக்கு காரணம் என ராஜேஸ்வரியின் பெற்றோர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் பிரியா ராஜை  தொடர்பு கொண்டு கேட்டதற்கு, உயிரிழந்த ராஜேஸ்வரியின் பெற்றோர்கள் அளித்துள்ள புகாரின் பேரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியர்களிடம் உரிய விசாரணை நடைபெற்று வருவதாகவும்,விசாரணை முடிந்த பிறகு தவறு நடந்து இருப்பது உறுதியானால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  தெரிவித்தார்.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் ஊழியர்களுக்கு 2 மாஸ் செய்திகள்..... அடிச்சது ஜாக்பாட்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News