2018-19ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.
மத்திய பட்ஜெட் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
>மத்திய பட்ஜெட் வளர்ச்சிக்கான நடுநிலையான பட்ஜெட்.
>கிராமப்புற மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது
>மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ள மெகா உணவுப் பூங்கா திட்டத்தால் தமிழகம் பயன்பெறும்
>வேளாண்மை, ஊரக வளர்ச்சி குறித்த திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன
>மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றார்.