அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனார் - போலீசில் சிக்கியவருக்கு என்ன கொடுத்தார்கள் ?

அண்ணனின் மனைவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த வந்த கொழுந்தனார் போலீசிடம் பிடிபட்டார். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 7, 2022, 03:58 PM IST
  • அண்ணிக்கு தொடர் பாலியல் தொல்லை
  • நிர்வாணமாக நின்று ஆபாச செயல்கள்
  • கண்ணீரோடு காவல்நிலையம் வந்து நின்ற பெண்
அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனார் - போலீசில் சிக்கியவருக்கு என்ன கொடுத்தார்கள் ?  title=

சென்னை பழைய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண். திருமணம் முடிந்து கணவரின் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கணவருடன் சென்ற பெண் புகார் ஒன்றை அளித்தார். அதை பெற்று கொண்ட போலீசார் கோபத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார்கள். 

harassment,Chennai,brother-in-law,brothers wife,அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனார்

அந்த புகாரில் தனது கணவரின் தம்பியான சுரேஷ் குமார் என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும், அன்றைய தினம் தனது முன்பு நிர்வாணமாக நின்று ஆபாச செயல்கள் புரிந்து தன்னை பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பெண், போலீசாரின் உதவியை நாடியிருக்கிறார். 

harassment,Chennai,brother-in-law,brothers wife,அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொழுந்தனார்

இதனையடுத்து புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசார், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச செயல்களில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் IT RAID - எதற்காக ?

அண்ணனின் மனைவி தாய்க்கு சமமானவர் என்பார்கள் ; ஆனால் அதே அண்ணிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | நாட்டையே அலறவிட்ட செல்போன் திருட்டு - 2 வருடங்களாக தொடரும் கண்டெய்னர் கொள்ளையர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News