உடல் நலக்குறைவால் உயிரிழந்த ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி சாந்தன் உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து இன்று அதிகாலை 2.30 மணிக்கு விமானம் மூலம் சாந்தனின் உடல் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன், உடல்நலைக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். சாந்தனை இலங்கை அனுப்ப நடவடிக்கை எடுத்த போது, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சாந்தன் பிப்ரவரி 27ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு அதற்கு மறுநாள் அவர் மரணமடைந்தார்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள். சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | சாந்தனை ஏன் இலங்கைக்கு அனுப்பவில்லை...? தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி!
இந்த மனுவை விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதித்துறை நடுவர் சிவக்குமார் முன்னிலையில் வீடியோ பதிவுடன் சாந்தனின் பிரேத பரிசோதனை நடைபெற்றது. மருத்துவர்கள் பராசக்தி, ராமலிங்கம் தலைமையிலான குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
இந்நிலையில் தற்போது சாந்தன் உடல் எம்ஃபார்மிங் முடிந்தது. சாந்தனின் உடலுக்கு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து அவரது உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது.
இன்று அதிகாலை 2:30 மணிக்கு விமானம் மூலம் சாந்தனின் சொந்த நாடான இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. சாந்தனின் மறைவுக்கு பலரும் வேதனையுடன் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் படிக்க | பிரதமர் மோடி, பாஜக பெயரில் பேஸ்புக் மூலமாக மோசடி, ரூ.2997யை இழந்த துணி வியாபாரி
33 ஆண்டுகளுக்கு மேலான அரசியல் சட்ட போராட்டப் பயணம் சாந்தன் சாவை பார்க்கவா? என்று உடல்நலக் குறைவால் காலமான சாந்தனுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்தபோது வேதனை தெரிவித்தார்.
விடுதலை, விடுதலை என்று போராடி சாந்தனின் சாவைத்தான் இன்று பார்த்துள்ளோம் என்றும், பொதுசிறையில் இருந்து விடுதலையாகி, கொடுஞ்சிறையில் அடைத்துவிட்டார்கள், இதற்காகவா போராடினோம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தாயை பார்க்க வேண்டும் என்ற நியாயமான ஆசை கூட நிறைவேறவில்லை என்றும், சாந்தனுடைய இறப்பு, திரைப்படங்களில் வரக்கூடிய உச்சகட்ட காட்சியைப் போல உள்ளது என்றும், இரவு விடுதலையாகக்கூடிய நிலையில் காலையில் உயிரிழந்துள்ளார் என்று வேதனையை பகிர்ந்துக் கொண்ட சீமான், மீதி இருக்கும் 3 பேரையும் இந்த நிலைக்கு தள்ளாமல் அவரவர் விரும்பிய நாட்டுக்கு விரைவில் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும் படிக்க | சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சாந்தன் மரணம்! அதிகாரபூர்வ அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ