2026 தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெல்வார்கள் - அண்ணாமலை நம்பிக்கை

2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெருவார்கள் என அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

Written by - Arunachalam Parthiban | Last Updated : Jun 3, 2022, 11:01 AM IST
  • திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் நாளை மறுநாள் வெளியீடு
  • 8 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து பாஜக மீது ஊழல் புகார் இல்லை
  • 2026 தேர்தலில் 150 பாஜக எம்.எல்.ஏக்கள் வெற்றி பெருவார்கள்
2026 தேர்தலில் பாஜக சார்பில் 150 எம்.எல்.ஏ.க்கள் வெல்வார்கள் - அண்ணாமலை நம்பிக்கை title=

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் 8-ஆண்டு ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இதில், உரையாற்றிய அண்ணாமலை மத்திய அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். 

விழா மேடையில் அண்ணாமலை பேசியதாவது:-

இப்படி ஒரு மேடையில் தைரியமாக நின்று பேசுகிறோம் என்றால், அந்தளவிற்கு நமது மத்திய அரசு பல்வேறு சாதனைகளை செய்து உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் நமது நாடு மிகவும் பாதுகாப்பாக உள்ளது. ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், நக்சல் பகுதிகள் என குறிப்பிடும் அளவிற்கு இருந்த மத்திய பிரதேச, சட்டீஸ்கர் என அனைத்து பகுதிகளும் பாஜக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருக்கிறது. 

இது ஒரே ஒரு மனிதனால் மட்டும் சாத்தியம் அவர் தான் மோடி. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போரில் தலையிட்டு நமது பிரதமர் இருவர் மீதும் தவறு உள்ளது என வெளிப்படையாக தெரிவித்தார். எனவே போர் வேண்டாம் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். போர் சூழலில் உக்ரைனில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுத்தார். மத்தியில் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. 

ஆனால், இதுவரை எந்த ஒரு அமைச்சர் மீதும் ஊழல் புகார் சொல்ல முடியவில்லை. 2019-ம் ஆண்டு வீட்டுக்கு வீடு குடிநீர் இணைப்பு திட்டத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தினார். இத்திட்டம் கொண்டு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளில் 17 சதவீதமாக இருந்த தமிழ்நாடு தற்போது 37 சதவீதமாக உள்ளது. நீங்கள் 70 ஆண்டுகளாக செய்த சாதனையை பிரதமர் ஒரே ஒரு திட்டத்தின் மூலம் 20 சதவீதம் உயர்த்தி உள்ளார். 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவதற்குள் அதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பதற்கு வேலை செய்து வருகிறோம். 

மேலும் படிக்க | Vikram: நள்ளிரவில் களைகட்டிய தியேட்டர்கள் - ஆடிப்பாடி மகிழ்ந்த ரசிகர்கள்

கடந்த 8 ஆண்டுகளில் நாடு முழுவதும் 11 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 56 லட்சம் கழிப்பறைகளை சுவாச் பாரத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது. தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்துவரும் பிரதமர் மோடி அடுத்து மூன்றவது முறையாக நிச்சயம் ஆட்சியமைப்பார். அதற்கு அவர் செய்துள்ள நலத்திட்டங்களே சாட்சி. 

திமுக அமைச்சர்கள் இரண்டு பேர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய புத்தகம் வரும் 5-ம் தேதி மதுரையில் வெளியிடப்படும். 2026-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக சார்பாக 150 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு செல்வார்கள். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்தார். 

பின்னர், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பயன்பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்களை அவர் வழங்கினார். மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் தங்களை பாஜக கட்சியில் இணைத்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜின் சம்பவம்! விக்ரம் திரைவிமர்சனம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYe

Trending News