வாக்காளர் பெயர் நீக்கம்... மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!!

வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : Apr 25, 2024, 01:13 PM IST
  • மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்.
  • ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.
  • ஏராளமான வாக்காளர்களின் பெயர் காணாமல் போனது எப்படி என்று தமிழக பாரதிய ஜனதா கேள்வி.
வாக்காளர் பெயர் நீக்கம்...  மீண்டும் வாக்களிக்க வாய்ப்பு வழங்க கோரிக்கை..!! title=

தமிழகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19ம் தேதியன்று நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது கோவை மாவட்டத்தின் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தங்களுக்கு சாதகமான தொகுதிகளில் மட்டும் ஏராளமான வாக்காளர்களின் பெயர் காணாமல் போனது எப்படி என்று தமிழக பாரதிய ஜனதா கேள்வி எழுப்பியது. வாக்களிக்க ஆர்வமாக வாக்கு சாவடிக்கு வந்த பலர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஓட்டு போடாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை  பறிக்கப்பட்டது

இந்நிலையில், கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பீப்பில்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பின் சார்பில்,  நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில்  ஏராளமான பொதுமக்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் ஒரு லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை  பறிக்கப்பட்டதாகவும்  கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அண்ணாமலை ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் - கோவையில் அண்ணாமலை ஆதரவாளர்கள் நடத்திய, இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் ரமேஷ், இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத், ஜலேந்திரன்  உட்பட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.  

பீப்புல்ஸ் பார் அண்ணாமலை அமைப்பு

இந்த ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பிய  பீப்புல்ஸ் பார் அண்ணாமலை என்ற அமைப்பினர்,  தங்களது வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு ஜூன் நான்காம் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். 

மேலும் படிக்க | தலைமை காவலரை காரை ஏற்றி கொலை செய்த வழக்கு! சாராய வியாபாரிகளுக்கு தூக்கு தண்டனை?

மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதர்சன், பொதுமக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து பீப்பிள்ஸ் ஃபார் அண்ணாமலை என்ற அமைப்பை ஏற்படுத்தி அவருக்காக வாக்கு சேகரித்து வந்ததாகவும், தாங்கள் வாக்கு சேகரித்த பொதுமக்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகள், வாக்காளர் பட்டியலில் இருந்து  நீக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்த அவர்கள், வாக்களிக்க முடியாமல் போனவர்களுக்கு மீண்டும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்க ஆப்ரேஷன்... 26 வயது இளைஞர் உயிரிழப்பு - சென்னையில் அதிர்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News