கொரோனா வைரஸ் பரவல் தொடங்குவதற்கு முன் சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பாபநாசம் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. கொரோனா வைரஸ் பரவலுக்கு பின் இயக்கப்பட்ட இந்த விரைவு ரயில் பாபநாசத்தில் நிறுத்தப்படாமல் சென்று வந்தது.
இப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ,சட்டமன்ற உறுப்பினர்கள் ரயில்வே துறைக்கு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நேற்று (டிச. 3) முதல் திருச்செந்தூரில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயிலும், சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் விரைவு ரயிலும் பாபநாசத்தில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்தது.
நேற்று (டிச. 3) இரவு, சென்னையில் இருந்து திருச்செந்தூர் சென்ற விரைவு ரயில் பாபநாசத்தில் நின்று சென்றது. அதனை பச்சைக்கொடி அசைத்து ஒன்றிய இணை அமைச்சர் முருகன் வழி அனுப்பிவைத்தார்.
மேலும் படிக்க | திராவிட மாடலை உருவாக்கியது யார்?... இபிஎஸ் பேச்சுக்கு உதயநிதி ரிப்ளை
ரயில் நிறுத்தத்தை கொடியசைத்து துவக்கி வைத்தேன். இந்நிகழ்வில் திருச்சி பகுதியின் ரயில்வே கோட்ட மேலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கல்யாண சுந்தரம் அவர்கள், பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் மற்றும் @BJP4TamilNadu மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர். pic.twitter.com/sfAPTPq751
— Dr.L.Murugan (@Murugan_MoS) December 3, 2022
இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன்,"ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் உள்ள மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழக அரசு 126 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் கடல்பாசி வளர்க்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பி உள்ளது. இது மத்திய அரசின் பரிசினை உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள மீன்பிடி துறைமுகங்களை மேம்படுத்த 1200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் திருவெற்றியூர் பகுதியில் புதிதாக மீன்பிடி துறைமுகம் 150 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டு வருகிறது. தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இதனைப் போல் செங்கல்பட்டிற்கும், விழுப்புரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் 250 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் புதிதாக மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம்,"ஒன்றிய அமைச்சராக இருக்கக்கூடிய முருகன் தமிழகத்திற்கு என்னென்ன செய்தார் என்பது பின்னாளில் கேள்விக்குறியாக இருக்கும். முருகன் அமைச்சராக இருக்கும் போது அவரால் தமிழகத்திற்கு என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்தால் அவரது பெயர் நிலைத்து நிற்கும்.
அப்போது பாஜக தொண்டர்கள் 'பாரத் மாதா கி ஜே' என முழக்கங்களோடு கூச்சலிட்டனர்.
அவர்களிடம் இந்தப் பகுதி வளர்ச்சிக்கு என்னென்ன தேவை என அமைச்சரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, அதற்கு இடையூறாக ஏன் கத்துகிறீர்கள் என தெரிவித்து அவர் தனது பேச்சை தொடர்ந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
மேலும் படிக்க | ஓபிஎஸ் அணியில் மற்றொரு விக்கெட்! கோவை செல்வராஜ் விலகல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ