Bizarre Incident In Karur: கரூர் மாவட்டம் நொய்யல் அடுத்த சேமங்கி கிராமத்தை சார்ந்தவர் முருகேசன் (வயது 59). விவசாயி கூலி தொழிலாளியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வந்த எருமை மாடு ஒன்று சினை பிடிக்காததால், நொய்யலில் உள்ள கால்நடை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சினை ஊசி போட்டுள்ளார். இதன் காரணமாக எருமை மாடு சினையானது.
உரிய நாட்களுக்கு பின்னர் அந்த எருமை மாடு, கன்று ஒன்றை ஈன்றுள்ளது. அந்த கன்று முழுக்க முழுக்க வெண்மை நிறத்தில் இருந்துள்ளது. இதனை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த வெள்ளை நிற எருமை மாட்டை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். மற்ற எருமை மாடுகளுடன், இந்த வெள்ளை நிற எருமை மாடும் ஒன்றாக சேர்ந்து வளர்ந்து வருகிறது.
தற்போது அந்த வெள்ளை நிற எருமை மாடும் 5 மாத சினையாக உள்ளது. இந்த எருமை மாடு மற்ற கருப்பு நிற எருமை மாட்டை காட்டிலும் மிக சாதுவாக இருப்பதாகவும், வெயிலை (Summer) தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், காவிரி ஆற்றில் மேய்ச்சலுக்கு கூட்டிச் சென்றால், அடிக்கடி தண்ணீரில் போய் படுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தார் முருகேசன். இது தொடர்பாக கால்நடை மருத்துவரிடம் கேட்ட போது, மருத்துவ ரீதியாக இதற்கான காரணம் மெலனின் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க | கரூரில் கடும் வெப்ப அலை... மதிய நேர வேலைக்கு விலக்கு அளிக்க கோரிக்கை..!!
உடம்பில் மெலனின் சுரக்காதபோது இவ்வாறு வெண்மை நிறம் ஏற்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் சொல்லப்படுவதாகவும், இப்படிப் பிறக்கும் விலங்குகளை அல்ஃபினோ வகை விலங்குகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதாகவும், 10 ஆயிரத்தில் ஓர் உயிரினம் இப்படிப் பிறப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளதாக மருத்துவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | வாக்கு எண்ணிக்கை மையத்தில் செயல்படாத சிசிடிவி..பின்னணி என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ