Rajiv Gandhi Case Convict Santhan: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்த சாந்தன், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி விடுவிக்கப்பட்டார். இலங்கையைச் சேர்ந்த அவர், திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது தாய் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், தன்னை இலங்கைக்கு அனுப்பக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருந்தார். சமீபகாலமாக தனது உடல் எடை குறைந்து வருவதாகவும், கால் வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணவு உண்ண முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
நேற்று உத்தரவு... இன்று வந்த நகல்...
திருச்சியில் உள்ள மருத்துவமனைகளில் தனக்கு சிகிச்சை வழங்கிய போதும், அது எந்த பலனும் தராததால், சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்திருந்தார். தொடர்ந்து அவர் சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
மேலும் படிக்க | Chennai Mayor Priya : சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்து! அவருக்கு ஆபத்தா?
அவர் தொடர்ந்து, இலங்கைக்கு செல்ல வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்தார், அவர் இலங்கை செல்ல அனுமதி அளித்து ஒன்றிய அரசு நேற்று அனுமதி வழங்கியதாக கூறப்படுகிறது. முன்னதாக, சாந்தன் இலங்கைக்கு வர அந்நாட்டு அரசும் அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், சிகிச்சையில் இருக்கும் சாந்தன் இலங்கைக்கு செல்ல அனுமதி அளித்த உத்தரவு நகலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு ஒன்றிய அரசு இன்று அனுப்பியதாக கூறப்படுகிறது.
எப்போது இலங்கைக்கு?
அதன்பேரில் விரைவில் சாந்தன் இலங்கை செல்ல இருப்பதாக தெரிகிறது. எனினும், உடல்நலக் குறைப்பாட்டால் தவித்து வரும் சாந்தனின் உடல்நலனை பரிசோதித்து, அதன்பின் பல்வேறு நடைமுறைகளை மேற்கொண்ட பின்னர்தான் அவர் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், வரும் 10 நாள்களில் அவர் இலங்கை செல்ல வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம்
இது ஒருபுறம் இருக்க, சாந்தனின் பல நாள் கோரிக்கை வைத்து வந்தார். எனினும், பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு சில நாள்களே உள்ள நிலையில், தற்போது இந்த உத்தரவு வந்திருப்பது கவனிக்கத்தக்கது என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை என தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் பிப். 27, 28 ஆகிய இரண்டு நாள்கள் தமிழகத்தில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ராஜிவ் காந்தி வழக்கில் எழுவர் விடுதலை என்பது தமிழகத்தில் அரசியல் தளத்தில் பெரும் கவனத்தை ஈர்க்கக் கூடிய ஒன்றாகும். அந்த வகையில், சாந்தனின் நீண்ட நாள் கோரிக்கைக்கு மத்திய அரசு தற்போது கிரீன் சிக்னல் கொடுத்திருப்பது இதனை பாஜக அரசியல் ஆயுதமாக பயன்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. திருப்பூர், கோவை, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கும் நிலையில், நிச்சயம் இந்த அனுமதி உத்தரவை அவர் பேச்சில் தெரிவிக்கக்கூடும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
மேலும் படிக்க | கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா.. புறக்கணித்த இராமேஸ்வரம் மீனவர்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ