நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார். நேர்மையான, நாணயமான, ஊழலற்ற ஆட்சி அமைவதற்காக எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் களம் இறங்குவதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து ரஜினிகாந்த், தனது டிவிட்டர் கணக்கில் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்; இப்போது இல்லைன்னா எப்போதுமே இல்ல என்று பஞ்ச் டயலாக் எழுதியுள்ளார்.
ஜனவரியில் கட்சித் துவக்கம்,
டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. #மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்#இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல pic.twitter.com/9tqdnIJEml— Rajinikanth (@rajinikanth) December 3, 2020
சட்டமன்ற தேர்தலில் (Assembly elections) மக்களின் ஒருமித்த ஆதரவுடன் வெற்றி பெறுவோம் என்று ரஜினிகந்த் (Rajinikanth) தெரிவித்துள்ளார். மேலும், அதிசயம் நிகழும், அற்புதம் நடைபெறும் என்றும் அவர் உறுதியாக நம்புகிறார்.
Also Read | அரசியல் களத்தில் #ரஜினி... 234 இடங்களில் போட்டியிட உள்ளதாக தகவல்!!
ரஜினிகாந்தின் இந்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னதாக வெளியாகும் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென இன்று அவர் அரசியல் கட்சி தொடங்குவது, தேர்தலில் போட்டியிடுவது என்று அறிவித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினிகாந்தின் இந்த் ஆறிவிப்பு அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து இந்த செய்தியை வரவேற்றுள்ளனர்.
ரஜினி ரசிகர்கள் மட்டுமல்ல, அஜித் ரசிகர்களும் சூப்பர் ஸ்டாரின் சூப்பரான முடிவுக்கு மகிழ்ச்சி என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Congratulations Sir @rajinikanth
தல அஜித் குமார் அவர்களின் ரசிகர்கள் சார்பாக உங்களின் அரசியல் பிரவேசம் மிகசிறப்பாக அமைய வாழ்த்துக்கள் #Valimai #ThalaAjith pic.twitter.com/1W50wxWzqX
— AJITHKUMAR FANS RAGE™ (ThalaFC) December 3, 2020
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என 3 வருடமாக தெரிவித்து வருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி தான் அரசியலுக்கு வரவுள்ளதாக ரசிகர்கள் முன்பு அறிவித்தார் ரஜினிகாந்த். அவரது அறிவிப்புக்கு பிறகு நாடாளுமன்ற (Parliament) தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 20 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்து விட்டது. 1996ஆம் ஆண்டு முதலே ரஜினியை (Rajini Makkal Mandram) அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றனர். ரஜினிதான் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவிக்காமலேயே இருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக அதிரடியாக அறிவித்திருக்கிறார்.
Also Read | அரசியல் கட்சி தொடங்குவாரா? விரைவில் முடிவு....ரஜினிகாந்த் பேட்டி
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR