சென்னை: சென்னை எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரங்களை (ATM machines) குறிவைத்து பணமோசடி நடைபெற்றுள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் நூதன முறையில் இந்த திருட்டு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவுக்கு (Hariyana) தப்பிச் சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய மூன்று பேரை தமிழக தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற நூதன ஏடிஎம் திருட்டு சம்பவத்தில் ஹரியானாவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதையடுத்து நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டனர்.
இயந்திரத்தை சேதப்படுத்தாமல், தனித்துவமான முறையைப் பயன்படுத்தி சென்னையில் தொடர்ந்து இந்த மோசடி சம்பவங்கள் (Banking fraud) நடைபெற்றுள்ளன. சென்னையைப் போலவே வேறு எதாவது ஊரிலோ அல்லது மாநிலங்களிலோ மோசடிகள் நடைபெறுகிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது.
Also Read | ATM Machine: பணம் எடுக்க மட்டுமல்ல, பல்வேறு சேவைகளையும் வழங்கும் கற்பகவிருட்சம்
இந்த நூதன வகை திருட்டில் ஏடிஎம் இயந்திரமும் சேதப்படுத்தவில்லை, எச்சரிக்கை அலாரமும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பணத்தை எடுக்கும்போது, குறிப்பிட்ட சமயத்தில் கணினியில் சென்சார் (sensor) மறைக்கப்படுகிறது. இது பணம் சேகரிக்கப்பட்டதா இல்லையா என்பதைக் கண்டறியும் ஒரு சென்சார்.
இயந்திரத்தில் இருந்து வெளிவரும் பணம், சுமார் 20 வினாடிகளில் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் அது உள்ளே சென்றுவிடும்.சென்சார் தடுக்கப்பட்டால், இயந்திரம் பணத்தை திரும்பப் பெறவில்லை என்று கருதி, வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் பணம் மீண்டும் சென்றுவிடும். எனவே வாடிக்கையாளர்களுக்கு இதில் எந்த நட்டமும் இல்லை. வங்கிக்க்கு தான் சிக்கல்.
எஸ்.பி.ஐ வங்கி சார்பில் காவல்துறையிடம் வழங்கப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றவாளிகளை கைது செய்ய இரண்டு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட ஏடிஎம் கம் டெபாசிட் இயந்திரங்களிலிருந்து (ATM cum cash depositing machine) பணத்தை திரும்பப் பெறுவதை எஸ்பிஐ தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read | இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR