சாத்தான்குளத்தில் மீண்டும் போலீஸ் அராஜகம்: துன்புறுத்தல் தொடர்கிறது….

தூத்துக்குடியில் போலீஸ் காவலில் தந்தை-மகன் மோசமாக துன்புறுத்தப்பட்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே குலுக்கியது. இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, சாத்தான்குளம் நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு தாக்கியதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் வெளிவந்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 31, 2020, 02:30 PM IST
  • சாத்தான்குளத்தின் தைக்கா தெருவில் வசிக்கும் மார்ட்டின் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டார்.
  • காவல் நிலையத்தில் நடந்த சித்திரவதை காரணமாக அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
  • காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மார்டின்.
சாத்தான்குளத்தில் மீண்டும் போலீஸ் அராஜகம்: துன்புறுத்தல் தொடர்கிறது…. title=

சென்னை: தூத்துக்குடியில் (Thoothukudi) போலீஸ் காவலில் தந்தை-மகன் மோசமாக துன்புறுத்தப்பட்டு இறந்த சம்பவம் தமிழகத்தையே குலுக்கியது. இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, சாத்தான்குளம் (Sathankulam) நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு தாக்கியதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் வெளிவந்துள்ளது.

சாத்தான்குளத்தின் தைக்கா தெருவில் வசிக்கும் மார்ட்டின் என்பவர், ஆக்ஸ்ட் 23 அன்று, தான் இன்ஸ்பெக்டர் சேவியர் மற்றும் துணை இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோரால், அடிக்கப்பட்டு காவல் நிலையத்திற்கு (Police Station) இழுத்துச் செல்லப்பட்டதாகவும், அடுத்த நாள், அங்கு நடந்த சித்திரவதை காரணமாக ஏற்பட்ட பலத்த காயங்களால், பின்னர் தான் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மார்ட்டின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 24 முதல் 28 வரை அவர் சட்டவிரோதமாக போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் ஒரு நீதித்துறை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். மார்டினின் அறிக்கையை பதிவு செய்த நீதிபதி அவரை ஜாமீனில் விடுவித்தார்.

ALSO READ: சாத்தான்குளம் கொலை வழக்கு: மேலும் 3 போலீஸ்காரர்களை காவலில் எடுத்த சிபிஐ

"கடந்த ஆறு நாட்களாக நான் போலீஸ் நிலையத்தில் சட்டவிரோதமாக சித்திரவதை செய்யப்பட்டேன். என் வழக்கறிஞர் மன்றாடிய பிறகுதான் நான் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டேன்” என்று மார்ட்டின் கூறினார்.

அவர் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்ட போது, சித்திரவதை செய்ததற்காக மேலும் இரண்டு பொலிஸ் பணியாளர்களை அவர் பெயரிட்டுள்ளார்.

அவரை சட்டவிரோதமாக சித்திரவதை செய்ததற்காக காவல்துறை அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்ட்டினின் குடும்பத்தினர் கோரியுள்ளனர். பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையில், ஜெயராக் பென்னிக்ஸ் (Jayaraj Fenix) வழக்கு தொடர்பாக மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச், மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) இந்த வழக்கின் நிலை அறிக்கையை சீல் வைத்த உறையில் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவித்தது. இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஜெயராஜ் (55) மற்றும் அவரது மகன் ஜே பெனிக்ஸ் (31) ஆகியோர் காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

COVID-19 லாக்டௌனுக்கு மத்தியில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவின் போது தங்கள் மொபைல் கடையை திறந்து வைத்ததற்காக, தந்தை-மகன் இருவரும் ஜூன் 19 அன்று கைது செய்யப்பட்டு கோவில்பட்டி துணை சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

ALSO READ: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிப்பு

Trending News