இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படும்..காரணம் என்ன ?

தொன்று தொட்டு நெடுங்காலமாக பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் இன்று ஒரு நாள் மூடப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2021, 01:42 AM IST
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படும்..காரணம் என்ன ? title=

சென்னை :  தொன்று தொட்டு நெடுங்காலமாக பின்பற்றப்படும் பாரம்பரிய நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் இன்று ஒரு நாள் மூடப்படுகிறது. 150 ஆண்டுகள் பழமையும், சிறப்பும் வாய்ந்த உலகின் இரண்டாவது பெரிய நீதிமன்றமாகவும், இந்தியாவின் முதல் பெரிய நீதிமன்றமாகவும் விளங்குகிறது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த நீதிமன்றத்தில்  சட்டத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாது, அரசின் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். 

ALSO READ பாபர் மசூதி இடிப்பு தினம் - கோவையின் முக்கிய இடங்களில் சோதனை!

அதே போல அதிகாரிகளுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இந்த இடம் பயனுள்ளதாக செயல்பட்டு வருகிறது. இந்த உயர் நீதிமன்ற வளாகத்தை அனைவரும் பயன்படுத்தினாலும், ஒருபோதும் இதனை யாரும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையிலும், தனது அதிகாரத்தை நிலை நாட்டும் வகையிலும் சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகள் அனைத்தும் ஒவ்வொரு ஆண்டிற்கு ஒரு முறை மூடப்படுவது வழக்கம். 

இந்த பாரம்பரியத்தின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தின் ஏழு வாயில்களும் டிசம்பர் 4-ம் தேதியான இன்று (சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8 மணி வரை மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இந்த அறிவிப்பு குறித்த அதன் நகல்கள் உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.  நீதிமன்றம் மூடப்பட்டிருக்கும் இந்த 24 மணி நேரத்தில் நீதிமன்ற வளாகத்துக்குள் அரசு துறையினர், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் என யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.  ஆனால் பாதுகாப்பு பணியில் இருக்கும் CSIF அதிகாரிகள் மட்டும் பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

court

மேலும் இந்த உயர் நீதிமன்றமானது கன்னிகாபரமேஸ்வரி கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு முறையும் உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்பட்டு, அதன் சாவி கோவிலில் வைக்கப்படும் பாரம்பரிய நடைமுறை இன்றளவும் தொடர்வதாக கூறப்படுகிறது.

ALSO READ ஓடும் காரில் திடீர் தீ விபத்து! குழந்தையுடன் தப்பிய தம்பதி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News