கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்!

Katchatheevu Island: செல்போனில் வாய்ஸ் ரெக்கார்ட்டில் பேசுவதை எடுக்க கூடிய அண்ணாமலைக்கு மீனவர் பிரச்சினை குறித்து தெரியாமல் போச்சே என அண்ணாமலையை கிண்டல் செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 2, 2024, 02:32 PM IST
கச்சத்தீவு விவகாரம்: 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை.. செல்லூர் ராஜூ கிண்டல்! title=

Political News In Tamil: தேர்தல் பரப்புரைக்கு இடையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூடம், கேள்விகள் எழுப்பட்டன. அப்பொழுது அவர் பேசுகையில், "கச்சத்தீவை தாரைவார்த்தது குறித்து ஆர்.டி.ஐ., மூலமாக கண்டறிந்ததாக அண்ணாமலை தெரிவிக்கிறார். பத்தாண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க., தற்போது புதிதாக கண்டறிவது போல பேசுகின்றது. எல்லாம் தெரிந்த மெத்த மேதாவிகள் பேசுகின்ற நபர்களுக்கு தற்போது தான் கச்சத்தீவு குறித்து தெரியுமா? கச்சத்தீவு குறித்து அம்மா அவர்கள் 2006 ஆம் ஆண்டே ஆர்ப்பாட்டம், போராட்டம் என பல்வேறு எதிர்ப்புகளை முன்னெடுத்தார். அதேபோல மீன் சுவையாக இருக்கிறது, என எல்லை தாண்டி மீன்பிடிக்கும் நபர்களை பூ போட்டா வரவேற்பார்களா? துப்பாக்கி வைத்து தான் சுடுவார்கள் என கலைஞர் அவர்கள் கொச்சையாக பேசினார்கள். இதை எல்லாத்தையும் எதிர்த்தவர் அம்மா" எனக் கூறினார். 

20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை கச்சத்தீவை பற்றி ஏன் படிக்கவில்லை?

மெத்தை, மேதாவி, 20 ஆயிரம் புத்தகம் படித்த அண்ணாமலை இதையெல்லாம் ஏன் படிக்காமல் விட்டார். மீனவர் பாதிப்பு குறித்து எப்படி தெரியாமல் இருந்தார். கச்சத்தீவை கலைஞர் அவர்கள் 1974-ல் தாரைவார்த்தார். ஆனால் இதெல்லாம் தெரியாமல் அண்ணாமலை இதனை ஆர்.டி.ஐ.,மூலம் தெரிந்துகொண்டேன் என்கிறார். மீனவர்கள் பாதிப்பு குறித்து தெரியாமல் இருந்துள்ளார். இதற்கு ஆர்.டி.ஐ தான் தேவையா? மத்தியில் ஆட்சியில் இருப்பதால் உளவுத்துறை மூலமாக தெரிந்து கொண்டிருக்கலாம். செல்போனில் வாய்ஸ் ரெக்கார்ட்டில் பேசுவதை எடுக்க கூடிய அண்ணாமலைக்கு மீனவர் பிரச்சினைக்கு தெரியாமல் போச்சே என அண்ணாமலையை கிண்டல் செய்தார்.

அண்ணாமலை யார்? அண்ணாமலை என்ன ஞானியா? -செல்லூர் ராஜூ

அண்ணாமலை வண்டி தான் டெல்லிக்கு செல்லும் என்கிறாரே? என்ற கேள்விக்கு பதில் அளித்த அதிமுக மூத்த தலைவர் செல்லூர் ராஜூ, "எந்த வண்டி டெல்லிக்கு போகும், எந்த வண்டி டெல்லிக்கு போகாது என்று மக்கள் தான் தீர்ப்பு அளிப்பார்கள். மக்கள் தான் எஜமானர்கள். இதனை அண்ணாமலை தீர்மானிக்க யார்? அண்ணாமலை என்ன ஞானியா? அரசியலுக்காக எதுவென்றாலும் அண்ணாமலை பேசலாம். எந்த வண்டி டெல்லிக்கு போகும் என்று தேர்தலின் போது மக்கள் முடிவு செய்வார்கள்" என்றார்.

மேலும் படிக்க - பாஜகவை அதிமுக விமர்சிக்காது... காரணத்தை ஓபனாக சொன்ன எடப்பாடி பழனிசாமி

அமலாக்கத்துறை குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை.

பி.ஜே.பி., குறித்து விமர்சனம் செய்யும் உங்களுக்கு அமலாக்கத்துறை மீது பயம் இல்லையா? எனக் கேட்ட கேள்விக்கு, "மடியில் கணமில்லை வலியில் பயமில்லை. அமலாக்கத்துறை குறித்து எங்களுக்கு எந்த பயமும் இல்லை. சிறையே எங்களுக்காக தான் கட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரன் வாய்ப்புட்டு சட்டமே எங்களுக்காக தான் கொண்டு வந்தான். இப்ப இல்லை அப்போது  அழகிரி அதிகாரத்தில் இருக்கும்போதே அவருக்கு எதிராக அரசியல் செய்தவன் நான். அழகிரி மிகப் பெரிய ஜாம்பவானாக இருந்தார். மதுரை மீனாட்சி, சொக்கநாதருக்கு மேலாகவே செல்வாக்கு என்பது போல் அழகிரி ஆதரவாளர்கள் துதி பாடினார்கள். ஆனால் தற்போது அவர்கள் எல்லாரும் எங்க இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பசை இருக்கும் இடத்தை தேடி சென்று விட்டார்கள். இதற்கெல்லாம் பயப்படமாட்டோம்" என்றார்.

தி.மு.க.,வை நியாயமான முறையில் விமர்சனம் செய்கிறோம்

தி.மு.க., விமர்சனம் குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், "தி.மு.க., நல்லது செய்தால் வரவேற்போம். என்ன செய்தார்கள் திமுக. ஒன்றும் செய்யவில்லை. நாங்கள் தி.மு.க.,வை நியாயமான முறையில் தான் விமர்சனம் செய்கிறோம்" என்றார்.

மேலும் படிக்க - கோவையில் மோதிக்கொள்ளும் பாஜக - அதிமுக..! தனி ரூட் எடுத்த திமுக!நிலவரம் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News